பச்சை நிறத்திற்கு மாறிய சிகாகோ நதி: மீண்டும் மீட்கப்பட்ட பாரம்பரியத்தின் சுவாரஸ்ய பின்னணி!

Update: 2021-03-15 11:50 GMT

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் நீர்வழிப்பாதையை இரண்டாம் ஆண்டாக திறக்க வேண்டாம் என்ற முந்தைய முடிவை மேயர் லோரி லைட்ஃபுட் மாற்றிய பின்னர், சிகாகோ நதியில் பச்சை நிற சாயம் பூசப்பட்டது. புனித பாட்ரிக் தினத்திற்கு முன்னதாக சாயமிடுதலை லைட்ஃபுட் அங்கீகரித்த பின்னர், படகுகளில் இருந்த குழுவினர் காலை 7 மணியளவில் ஆற்றின் ஓரத்தில் பச்சை சாயத்தை வீசத் தொடங்கினர். இதையடுத்து முழுவதும் பச்சை நிறமாக மாறிய சிகாகோ நதியின் தெளிவான காட்சி, காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த பாதசாரிகளை மகிழ்வித்தது.


சிகாகோவாசிகள் லோரி ஜோன்ஸ் மற்றும் மைக் ஸ்மித் ஆகியோர் பசுமையான நீரை கண்டு கழித்ததோடு, 1962'ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த பாரம்பரியம், கொரோனாவுக்கு பின்பு தற்போது இந்த ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினர். "மேயர் லைட்ஃபூட் இந்த பாரம்பரியத்தைத் தொடர முடிவு செய்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஏனென்றால் 2020 ஆம் ஆண்டில் வேறு பல விஷயங்களைப் போலவே இதையும் கடந்த ஆண்டு நாங்கள் தவறவிட்டோம்" என்று 59 வயதான ஜோன்ஸ் சிகாகோ ட்ரிப்யூனிடம் கூறினார்.



 கடந்த ஆண்டு, லைட்ஃபுட் திடீரென நகரின் 2020 அணிவகுப்புகளையும், நதி சாயமிடுதலையும் தொற்றுநோயின் ஆரம்ப நாட்களில் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு ரத்து செய்தார். நீடித்த தொற்றுநோயால் இந்த ஆண்டு மீண்டும் அணிவகுப்புகளை நிறுத்திவிட்டு, நதி மீண்டும் சாயமிடப்படாது என்றும் சமீபத்தில் கூறியிருந்தார். ஆனால் லைட்ஃபுட்டின் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில், நகரம் நீண்டகால பாரம்பரியத்தை மதிக்கும் வகையில், அதன் கூட்டாளர்களான சிகாகோ பிளம்பர்ஸ் யூனியன் லோக்கல் 130'க்கு நதியை சாயமிட அங்கீகாரம் அளித்ததாகவும் கூறினார்.

Similar News