தே.மு.தி.க. விலகியது அ.தி.மு.க.விற்கு இழப்பா? எடக்கு மடக்கா கேட்கப்பட்ட கேள்விக்கு, எதார்த்தமான பதிலில் சிக்ஸசர் அடித்த எடப்பாடியார்!
கூட்டணியை விட்டு வெளியேறியவர்கள் பழி சுமத்துவது தவறு என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். தே.மு.தி.க. விலகியது அ.தி.மு.க.விற்கு இழப்பா, தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் வருகிறதே என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், அவர்களை பக்குவம் இல்லாத அரசியல்வாதிகள் என்று தான் கருதுகிறேன்.
கூட்டணி என்பது அவ்வப்போது ஏற்படுகிற சம்பவம். வெளியேறியவுடன் இப்படி நினைத்தவாறு என்று பேசுவது சரியல்ல. அது கூட்டணிக்கும் அழகு அல்ல.
கட்சியுடன் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் தனியாக சென்று நிற்பதில் தவறு இல்லை. ஆனால், ஒரு கட்சி மீது பழி சுமத்துவது தவறு என்று கூறியுள்ளார்.
மேலும், பா.ம.க.விற்கு கொடுத்த மரியாதை தே.மு.தி.க.வுக்கு கொடுக்கவில்லை என்று கூறுகிறார்களே, அது குறித்து தங்கள் கருத்து என்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தகுதி உள்ளது. வாக்கு வங்கி என்று ஒன்று உள்ளது.
நீங்களே என்ன செய்கிறீர்கள், இவருக்கு 40 சதவீதம் , இவருக்கு 36 சதவீதம், இவருக்கு 7 சதவீதம் என நீங்களே பத்திரிகையிலும், ஊடகத்திலும் வெளியிட்டு கொண்டிருக்கிறீர்கள். அதற்கு ஏற்றார் போலத்தான் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படும் என்று கூறியுள்ளார்.