அரசியலுக்காக என் தாயை இழுக்க வேண்டாம் - உதயநிதியை வெளுத்து வாங்கிய சுஷ்மா சுவராஜின் மகள்!
மு.க ஸ்டாலின், ஆ.ராசா, தயாநிதி என தி.மு.கவின் அனைத்து முக்கிய தலைவர்கள் தங்களது இழிவான மற்றொரு முகத்தை பிரச்சாரக் கூட்டங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். தங்கள் மீது வைக்கப்படும் ஊழல் குற்றச்சாட்டு மற்றும் குடும்ப அரசியல் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்காமல் முதல்வரின் அம்மா, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடி என்று ஒருவரையும் விட்டு வைக்கவில்லை.
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தனிமனிதத் தாக்குதலில் இறங்கிய இவர்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக உதயநிதி அநாகரிகத்தின் உச்சத்தைத் தொட்டிருக்கிறார். அப்பா ஸ்டாலின் ஒரு பக்கம் மறைந்த அம்மா ஜெயலலிதாவை பற்றிப் பேசி ஓட்டு வாங்க முயற்சிக்கிறார் என்றால், உதயநிதி மறைந்த இரு பெரும் பாஜக தலைவர்கள் சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண் ஜெட்லி ஆகியோரின் இறப்பைக் கொச்சைப்படுத்தி பேசி இருக்கிறார்.
இருவருமே உடல் உபாதைகளால் சிரமப்பட்டதும், அதற்காக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டதும், பின்னர் இயற்கையாக மரணித்ததும் அனைவரும் அறிந்ததே. ஆனால் உதயநிதி தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடியின் டார்ச்சரால் தான் இருவரும் இறந்தார்கள் என்று அருவருக்கத்தக்க வைகையில் இறப்பைக் கூட இழிவுபடுத்தி பேசினார்.
மற்றவர்களின் இறப்பில் அரசியல் செய்து பிழைக்கும் கீழ்த்தரமான நிலையில் தான் எம்.ஜி.ஆர் காலம் முதல் இன்று வரை தி.மு.க இருக்கிறது என்பதை உதயநிதியின் பேச்சு நிரூபித்திருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.