இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு!! ஒரு புதிய டிஜிட்டல் அனுபவம்!!

Update: 2026-04-03 09:59 GMT

இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1 தொடங்கி முழுமையாக டிஜிட்டல் முறையில் நடத்தப்படவுள்ளது. 


இந்த கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டத்தில் ஏப்ரல் - செப்டம்பர் 2026 வரை வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு நடைபெறும். இதில் வீடுகளின் நிலை, குடும்ப வசதிகள் மற்றும் சொத்துக்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும்.


அதன்பின் இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு 2027 பிப்ரவரியில் தொடங்கும். இதில் தனிநபர்களின் மக்கள்தொகை, கல்வி, இடம்பெயர்வு மற்றும் சமூக-பொருளாதார விவரங்கள் சேகரிக்கப்படும். சாதி வாரியான தகவல்களும் சேகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News