அரவக்குறிச்சியில் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் - அண்ணாமலை உறுதி!

Update: 2021-04-03 01:00 GMT

அரவக்குறிச்சி மக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரவக்குறிச்சியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்


பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக அரவக்குறிச்சியில் போட்டியிடுபவர் அண்ணாமலை. இவர் அரவக்குறிச்சியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரித்து வருகிறார். அவருக்கு செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர். அரவக்குறிச்சி மக்கள் பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அண்ணாமலை பிரதமர் நரேந்திர மோடி செய்துள்ள நலத் திட்டங்களை பொது மக்களிடம் எடுத்துரைத்து வாக்குகளை சேகரித்தார்.


தேர்தல் கருத்துக் கணிப்பில் முன்னிலை வகிக்கும் அண்ணாமலை வெற்றி பெறுவது உறுதியாகி இருக்கும் நிலையில் தற்போது அரவக்குறிச்சியில் இருக்கும் இஸ்லாமியர்கள் கூட அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்றதும் அரவக்குறிச்சியில் உள்ள மக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் கிடைப்பதற்கான வழிவகைகள் செய்யப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தி.மு.க. வேட்பாளராக கரூர் தொகுதியில் போட்டியிடும் செந்தில் பாலாஜியின் அடியாட்கள் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தொண்டர்களை தாக்கியுள்ள சம்பவமும் அரங்கேறியுள்ளது. இதில் அண்ணாமலையின் டிரைவர் கடுமையாக தாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் தோல்வி பயத்தில் தி.மு.க.வினர் இதுபோல் செய்து வருவதாக அரவக்குறிச்சி பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் அவர் ஐபிஎஸ் பணியில் மோசடியாக சேர்ந்தார் என்று தி.மு.க.வினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். நான் மன்மோகன் சிங் ஆட்சியில் இருக்கும் போது தான் ஐபிஎஸ் பணியில் சேர்ந்தேன் என்று அண்ணாமலை பதிலடி கொடுத்தார்.


மேலும் செந்தில் பாலாஜியை போன்ற பல 'பிராடுகளை' போலீஸ் பணியில் இருந்தபோது தூக்கி போட்டு மிதித்து இருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்திருந்தது இணையதளத்தில் வைரலாக பகிரப்பட்டு இருந்தது. அண்ணாமலையின் வெற்றி உறுதியாகியுள்ள நிலையில் படித்தவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அண்ணாமலையின் வெற்றி இளைஞர்களை அரசியலுக்கு ஆர்வமுடன் அழைத்து வரும் என்றும் அரவக்குறிச்சி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Similar News