தன்னை அவமதித்த இளைஞர்களுக்கு தண்டனை கொடுத்த சிவபெருமான்- மன்னிப்பு கேட்டு கதறிய தரமான சம்பவம்!
கர்நாடக மாநிலத்தில் சிவன் கோவில் ஒன்றில் கோவிலை அவமதிக்கும் செயலில் ஈடுபட்ட முஸ்லிம் இளைஞர் ஒருவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து மேலும் இருவர் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு கடவுளிடம் மன்னிப்பு கேட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூரில் கோரகஜ்ஜா சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சில நாட்களுக்கு முன்னர் மர்ம நபர்கள் புகுந்து பக்தர்கள் முகம் சுளிக்கும் வகையிலான வேலையில் ஈடுபட்டனர். பக்தர்கள் காணிக்கை அளிக்கும் உண்டியலில் ஆணுறையைப் போட்டதோடு உண்டியலை சுற்றி சிறுநீரை கழித்து விட்டு சென்றுள்ளனர். உண்டியலை திறந்து பார்த்தபோது உண்டியலில் ஆணுறை இருந்ததைக் கண்ட பக்தர்கள் வேதனை அடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இருப்பினும் பொதுமக்கள் அதிகமாக வந்து போகும் கோவில் என்பதால் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க முடியாத நிலையில் காவல்துறையினர் இருந்துள்ளனர். இதனால் வேதனையடைந்த பக்தர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடவுளே தண்டனை கொடுக்க வேண்டும் என்று கோரகஜ்ஜா சுவாமி கோவிலில் கூட்டுப் பிரார்த்தனை மேற்கொண்டனர்.
இதன் பின்னர் தான் அனைவரும் அதிசயத்தக்க விஷயம் நிகழ்ந்தது. கடந்த 3 நாட்களுக்கு முன்னர் இரண்டு முஸ்லிம் வாலிபர்கள் கோவிலுக்கு பதறியடித்து ஓடி வந்து நேராக கோவில் பூஜாரியிடம் சென்று இந்த தவற்றை தாங்கள் தான் செய்ததாக ஒப்புக் கொண்டு தங்களை மன்னிக்க வேண்டும் என்றும் கோரகஜ்ஜா சுவாமியிடம் கூறி தங்களை மன்னிக்கச் சொல்ல வேண்டும் என்று கூறி கதறி அழுதுள்ளனர். இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் இருவரும் அப்துல் ரஹீம் மற்றும் தவ்பிக் என்று தெரியவந்துள்ளது.
அப்துல் ரஹீம், தவ்பிக் மற்றும் நவாஸ் என்ற மூன்று முஸ்லிம் இளைஞர்களும் இந்த சிவன் கோவிலுக்கு வந்து ஆணுறையை கோவில் உண்டியலில் போட்டுவிட்டு உண்டியலை சுற்றி சிறுநீர் கழித்து சென்றுள்ளனர். பிறகு மூவரும் வீட்டுக்குச் சென்ற போது கோவிலில் சிறுநீர் போன நவாஸ் ரத்த வாந்தி எடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து உண்டியலில் ஆணுறை போட்ட தவ்பிக்கும் ரத்த வாந்தி எடுத்துள்ளார். இருவருக்கும் உடல்நிலை மிகவும் மோசமானதைத் தொடர்ந்து நவாஸ் தனது நண்பர்களை அழைத்து கோவிலை அவமதித்ததால் தான் நமக்கு இவ்வாறு நடக்கின்றது உடனே கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்டு விடுங்கள் என்று கூறி மரணமடைந்துள்ளார்.