வேட்டி கொள்ளையர்கள் அட்டகாசம்!! பாளையங்கோட்டை பகுதியில் பரபரப்பு!!

Update: 2026-01-29 08:36 GMT

பாளையங்கோட்டை பகுதிக்கு அருகில் இருக்கும் கிருபாநகரில் 3 வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் வசித்து வந்த மனோ ரஞ்சிதம், கல்லூரிப் பேராசிரியர் மற்றும் மற்றொரு வீட்டில் புகுந்து மொத்தம் ரூ.1.62 லட்சம் மற்றும் 5 சவரன் தங்க நகைகளை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

 இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, 3 பேர் வேட்டியால் முகத்தை மறைத்துக் கொண்டு, நள்ளிரவு நேரத்தில் வீடுகளை நோட்டமிட்டு வந்த நிலையில் கொள்ளையடிப்பது பதிவாகியுள்ளது. இச்சம்பம் குறித்து அப்பகுதி மக்கள் பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

 ஏற்கனவே அப்பகுதியில் ஆறு மாதங்களுக்கு முன்பாக இதே போல திருட்டு சம்பவம் நடைபெற்று இருப்பதாகவும், தற்பொழுது மீண்டும் அப்பகுதியில் 3 வீடுகளில் கொள்ளைச் சம்பவம் நடந்து இருக்கும் நிலையில், 4 வீடுகளில் கொள்ளை முயற்சியும் நடந்துள்ளது என்று கூறியுள்ளனர். போலீஸார் இரவு நேர ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டுமென அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

Tags:    

Similar News