நெடுஞ்சாலை கட்டுமானம் விரைவில் ஒரு நாளைக்கு 40 கிலோமீட்டர்! நிதின் கட்காரி தகவல்!

Update: 2021-03-19 01:00 GMT

2014-15 ஆம் ஆண்டில், ஒரு நாளைக்கு வெறும் 12 கிலோ மீட்டராக இருந்தது, நடப்பு நிதியாண்டின் பிப்ரவரி மாதத்தில் நாள் ஒன்றுக்கு 34 கிலோ மீட்டராக நெடுஞ்சாலை கட்டுமான பணியின் வேகம் அதிகரித்துள்ளது.


நெடுஞ்சாலை கட்டுமான பணி அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், " கடந்த பிப்ரவரி மாதத்தின் கட்டுமானப்பணி வேகம் மார்ச் மாதத்திலும் தொடர்ந்தால், இந்த நிதி ஆண்டில் 13 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் நெடுஞ்சாலை புதிதாக கட்டப்பட்டு இருக்கும்" என்று தெரிவித்தனர்.

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, விரைவில் ஒரு நாளைக்கு நெடுஞ்சாலை கட்டுமான பணியின் வேகம் 40 கிலோமீட்டரை அடையும் என்று அறிவித்தார். கடந்த ஜனவரி 8-ஆம் நாள், நெடுஞ்சாலை கட்டுமான பணியின் வேகம் 76 கிலோ மீட்டரை தொட்டு சாதனை படைத்து உள்ளது.

ராஜேஷ்வர் கூறுகையில் ,"பண வளத்தை அதிகரிக்க வேண்டுமானால், ஏலதாரர்களுக்கு தளர்வுகளை அளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், ஒரு நாளைக்கு நெடுஞ்சாலை பணியின் வேகம் 40 கிலோமீட்டரையும் கடக்கும்" என்று கூறினார்.

"அடுத்த இரண்டு ஆண்டுகளில், ஒரு நாளைக்கு கட்டுமான பணியில் வேகம் 50 கி.மீ தொடும். ஏனெனில், இப்போது ஏராளமான சாலை கட்டுமான மற்றும் போக்குவரத்து திட்டங்கள் உள்ளன. மேலும், வணிகம் செய்வதற்கு தகுந்த சூழலாகவும் இருக்கிறது " என்று ஐஆர்பி உள்கட்டமைப்பின் தலைவர் எம்.டி. வீரேந்திர மைஸ்கர் கூறினார்.


சமீபத்தில் அரசாங்கம் மைல்கல் அடிப்படையில் இருந்த பில்லிங்கை மாதாந்திர பில்லிங்-க்கு முறைக்கு மாற்றியது, ஏற்கனவே நடந்து வரும் பணியின் பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு சாதகமான பணமாற்று சுழற்சி முறையை குறைத்தது போன்ற நடவடிக்கைகளை எடுத்தது. இதனால் சாலை கட்டுமான பணியின் வேகம் அதிகரித்தது.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக பட்ஜெட் 2020 - 2021 க்கு இதுவரை இல்லாத அளவு "ரூபாய் ஒரு லட்சத்தி 18 ஆயிரம் கோடி" மூலதன தொகையை வழங்கி ஊக்கப்படுத்தி உள்ளார்.

source: https://swarajyamag.com/news-brief/highway-construction-in-march-continues-in-top-gear-expected-to-reach-record-high-of-37-km-per-day

Similar News