பிரதமர் கிசான் திட்டத்தின் ₹6000 உதவித் தொகை உங்களுக்கு கிடைத்து விட்டதா? எப்படி தெரிந்த கொள்வது?

Update: 2021-05-14 06:01 GMT

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் அதன் மூன்றாவது தவணையை இன்று 11 மணிக்கு காணொலி காட்சியின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி விடுவிக்க இருக்கிறார். இந்த திட்டத்தின் கீழ் சுமார் 9.5 கோடி விவசாயிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் 2000 ரூபாய் வீதம் 19,000 கோடி ரூபாய் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படுகிறது.


பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த திட்டமான பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஒவ்வொரு விவசாயிகளின் வங்கிக் கணக்கிலும் 6000 ரூபாய் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் (PM Kisan) கீழ் மத்திய அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் 6000 ரூபாயை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கிறது. 2000-2000 ரூபாய் என மூன்று தவணைகளில், விவசாயிகள் கணக்கில் பணம் சேர்க்கப்படுகிறது. இதன் மூலம் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளதா என்று சரி பார்ப்பதற்கு பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டம் 2020 (PM Kisan Samman Nidhi Scheme 2020) இன் புதிய பட்டியலை pmkisan.gov.in இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தில் இன்னும் பயனாளியாக இணையாதவர்கள் ஆவணங்களை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யலாம். அதற்கு விவசாயிகள் முதலில் www.pmkisan.gov.in இணையதளத்தில் உள்ளே நுழைந்து அதில் கொடுக்கப்பட்டுள்ள 'உழவர் கார்னரில்' கிளிக் செய்ய வேண்டும். பிறகு பிரதமர் கிசான் (PM Kisan) யோஜனாவின் கீழ் விவசாயிகள் தங்களை பதிவு செய்ய விருப்பம் என்று தெரிவித்து கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்து விவசாயிகள் பயன் பெறலாம்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள பயனாளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள pmkisan.gov.in என்ற வலைத்தளத்திற்குச் சென்று‌ சரிபார்க்கலாம். இதற்குப் பிறகு, இங்கே பயனாளி பட்டியல் இணைப்பைக் கிளிக் செய்யுங்கள். இப்போது உங்கள் மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராம விவரங்களை உள்ளிடவும். இதை நிரப்பிய பிறகு, Get Report என்பதைக் கிளிக் செய்து முழுமையான பட்டியலைப் பார்க்கலாம்.

Similar News