ஜன் ஆசாதி கேந்திரா மருந்தகத்தின் 7,500 ஆவது கிளையை நாட்டிற்காக அற்பணிப்பு!

Update: 2021-03-07 13:18 GMT

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று ஷில்லாங்கில் உள்ள வடகிழக்கு இந்திரா காந்தி பிராந்திய சுகாதார மற்றும் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் 7,500 வது ஜன் ஆசாதி கேந்திரத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் தேசத்திற்காக அர்ப்பணித்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த மையங்களில் இருந்து மலிவு விலையில் மருந்துகளை வழங்குவதன் மூலம் ஏழைகள் பணத்தை மிச்சப்படுத்த உதவும் என்றார்.


"மருந்துகள் விலை உயர்ந்தவை. அதனால்தான் ஏழைகளுக்கு அவர்களின் பணத்தை மிச்சப்படுத்தும் வகையில் பிரதமர் ஜன் ஆஷாதி யோஜனா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மோடி கி டுகான் என மக்கள் அதை அழைக்க விரும்புவதால், மலிவு விலையில் மருந்துகளை வாங்குமாறு மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்." என ஒரு பயனாளியுடன் உரையாடும் போது பிரதமர் கூறினார். ஜன் ஆஷாதி திவாஸின் ஒரு பகுதியாக மோடி பயனாளிகளுடன் உரையாடினார்.

"பிரதமர் ஜன் ஆசாதி பரியோஜனா நாடு முழுவதும் ஏழை மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்காக நடத்தப்படுகிறது. இந்த யோஜனா சேவா மற்றும் ரோஸ்கர் ஆகியவற்றின் ஊடகம். இது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் வழங்குகிறது. திட்டத்தின் ஒரு பகுதியாக, சிறுமிகளுக்கான சானிட்டரி பேட்கள் ₹ 2.5 க்கு கிடைக்கும்" என்று பிரதமர் கூறினார்.


ஜன் ஆஷாதி பற்றி மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, மார்ச் 1 முதல் மார்ச் 7 வரை ஒரு வாரம் முழுவதும், நாடு முழுவதும் ஜன் ஆஷாதி வாரம் கொண்டாடப்படுகிறது என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வாரத்தின் கடைசி நாள் ஜன் ஆஷாதி திவாஸ் கொண்டாடப்படும்.

மோடி கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் மத்திய வேதியியல் மற்றும் உரங்களுக்கான அமைச்சர் டி.வி.சதானந்த கவுடாவும் கலந்து கொண்டார். பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஆஷாதி திட்டம் தரமான மருந்துகளை மலிவு விலையில் வழங்க முற்படுகிறது மற்றும் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News