தற்சார்பு இந்தியா முயற்சியில் 90 லட்சம் நிறுவனங்களுக்கு ரூ.2.4 டிரில்லியன் அளவு கடன் உதவி!

Update: 2021-02-28 01:00 GMT

தற்சார்பு இந்தியா, பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் பெரிய நகரங்களால் மட்டும் உருவாக்கப்படாது. சிறிய தொழில் முனைவோர் மற்றும் மக்களின் கடின உழைப்பால் கிராமங்களிலும் தற்சார்பு இந்தியா உருவாக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சிறந்த வேளாண் தயாரிப்புகளை உருவாக்கும் விவசாயிகளாலும், விவசாய குழுக்களாலும் தற்சார்பு இந்தியா உருவாக்கப்படும். நமது குறு,சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களாலும் தற்சார்பு இந்தியா உருவாக்கப்படும். அதனால் கொரோனா காலத்தில், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

இந்த நடவடிக்கைகளால் 90 லட்சம் நிறுவனங்கள் ரூ.2.4 டிரில்லியன் அளவுக்கு கடன் பெற்றன. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக, வேளாண், நிலக்கரி மற்றும் விண்வெளித்துறையில் பல சீர்த்திருத்தங்களை அரசு மேற்கொண்டது என அவர் கூறினார்.

நமது பொருளாதாரம் விரிவடைந்து வருவதால், விரைவான வளர்ச்சிக்கு, கடன் வழங்குதலும் முக்கியம் என பிரதமர் கூறினார். புதிய தொடக்க நிறுவனங்கள் ஆய்வு மேற்கொள்ள, புதிய நிதி திட்டங்களை உருவாக்கியதற்காக நமது நிதி தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்களை அவர் பாராட்டினார்.

கொரோனா தொற்று காலத்தில், தொடக்க நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தில் நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் பங்கேற்றதாக அவர் கூறினார். இந்த ஆண்டிலும், நிதித்துறையில் மிகச் சிறந்த உந்துதல் இருக்கும் என நிபுணர்களிடம் அவர் தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தியது மற்றும் புதிய முறைகளை உருவாக்கியது ஆகியவை நாட்டின் நிதி உட்புகுத்தலில் மிகப் பெரியளவில் பங்காற்றின என பிரதமர் கூறினார்.

உள்கட்டமைப்பு மற்றும் தொழில் திட்டங்களுக்கு நீண்ட கால நிதி தேவைகளை நிறைவேற்ற உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான புதிய நிதி மேம்பாட்டு நிறுவனங்களை உருவாக்குவது பற்றியும் அவர் பேசினார்.

 

Similar News