2.100 கோடியைத் தாண்டியது ராமர் கோவில் கட்டுமான நிதி.!

Update: 2021-02-28 10:46 GMT

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில் கட்டுமானத்திற்காகக் கோவில் அறக்கட்டளை ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா தற்போது வரை 2100 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளது. மேலும் இந்த நிதியானது மக்கள் தங்கள் தன்னார்வத்துடன் வந்து அளித்த பங்காகும்.



அறிக்கையின் படி, கூட்டங்களில் கோவில் அறக்கட்டளை 2,100 கோடி பெற்றிருப்பதாகக் கணக்கிட்டுள்ளது. இந்த 44 நாள் நிதி திரட்டும் பிரச்சாரமானது விஷ்வ இந்து பரிசத்தால் தொடங்கப்பட்டு சனிக்கிழமை அன்று முடிவடைந்தது. ஜனவரி 15 இல் தொடங்கப்பட்ட போது கட்டுமானத்திற்கு 1,100 கோடி வருமென்று அறக்கட்டளை எதிர்பார்த்தது. ஆனால் ஆச்சிரிமாக, கணக்கிடப்பட்டதை விட நாட்டில் மக்களின் பங்கீட்டால் 1000 கோடி அதிகமாகக் கிடைத்துள்ளது.

"நாட்டில் கிராமத்தில் வசிக்கும் மக்கள், மத ஒதுக்கீடுகளில் இருக்கும் மக்கள் உள்ளிட்டோர்களின் பங்களிப்புடன் இந்த நிதி திரட்டும் பிரச்சாரம் சனிக்கிழமை முடிவடைந்தது. சனிக்கிழமை மாலை கணக்கீட்டின் படி, மொத்த நிதியாக 2100 கோடியைப் பெற்றுள்ளது," என்று அறக்கட்டளையின் பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி தெரிவித்தார்.

கோவிலின் மொத்த கட்டுமானத்திற்கு 1,100 கோடி கணக்கிடப்பட்டது என்று கிரி தெரிவித்தார். இந்த நிதியைத் திரட்டுவதற்காக ஸ்ரீ ராம் மந்திர் நிதி சமர்பண் கீழ் 1.50 லட்ச VHP தொண்டர்கள் நிதிகளைத் திரட்டினார். மேலும் அறக்கட்டளையின் வங்கிக் கணக்குகளில் நிதிகளை டெபாசிட் செய்வதற்காக 37 ஆர்வலர்கள் நியமிக்கப்பட்டனர்.



ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் வங்கி மற்றும் பாங்க் ஆப் பரோடா உள்ளிட்டவற்றில் கணக்குகளைத் திறந்துவைத்தது. குக்கிராமத்தில் உள்ள மக்களிடம் இருந்து நிதிகளைப் பெற்று ஆர்வலர்கள் வங்கிக் கணக்குகளில் நிதிகளை டெபாசிட் செய்வர். பிப்ரவரி 27 இல் நிதி திரட்டும் பணி நிறைவடைந்தது. மேலும் இந்த நிதி திரட்டும் பேரணியின் போது இருந்ததற்காகத் தாக்கப்படும், கொல்லப்பட்டுமுள்ளனர். பல பேரணிகளில் பல இடையூறுகள் ஏற்பட்டன.

Similar News