கொரோனா 2வது அலையை பற்றி எச்சரித்த பிரதமர்: பொய் பிரச்சாரம் செய்யும் காங்கிரஸ்.!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு தவறி விட்டதாகவும் இதற்கு முக்கிய பொறுப்பு பிரதமர் மோடிதான் எனவும் பொய்யான பிரச்சாரங்களை காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற எதிர்க்கட்சிகள் சமூக வலைதளம் வாயிலாகவும் நேரடியாகவும் செய்து வருகின்றன.;

Update: 2021-05-20 08:56 GMT

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு தவறி விட்டதாகவும் இதற்கு முக்கிய பொறுப்பு பிரதமர் மோடிதான் எனவும் பொய்யான பிரச்சாரங்களை காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற எதிர்க்கட்சிகள் சமூக வலைதளம் வாயிலாகவும் நேரடியாகவும் செய்து வருகின்றன.

இதற்கு பதிலடி தரும் விதமாக மார்ச் மாதம் 17, 2021 அன்று பிரதமர் நரேந்திர மோடி COVID-19 மறுஆய்வுக் கூட்டத்தின் போது இரண்டாவது அலை வர இருப்பதாகவும் அதற்கு அனைத்து மாநிலங்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் இரண்டாவது அலையை சமாளிக்க விரைவான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி இருந்தார்.

ஆனால் மாநிலத்திற்குள் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாத டெல்லி மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்ததுடன் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நிலைமை மோசமான பிறகு மத்திய அரசை மாநில அரசுகள் குற்றம் சாட்டுவதை வழக்கமாக வைத்துள்ளன. மேலும் PM CARES தொகுப்பிலிருந்து பெறப்பட்ட நிதியில் இருந்து எந்த ஒரு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் டெல்லியில் எடுக்கப்படவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல்கள் வெளியாகின.


மாநிலங்களுக்குள் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்ட உடன் மத்திய அரசு விரைவான நடவடிக்கைகளை எடுத்து ஆக்சிஜன் உற்பத்தி செய்து அனைத்து மாநிலங்களுக்கும் விரைவாக அனுப்பி வைத்து ஆக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்தது. இதற்காக மத்திய அரசின் அனைத்து துறைகளும் இரவும் பகலுமாக அயராது சிறப்பாக பணியாற்றின. அதேபோல் 900MT தேவைப்பட்ட நாட்டிற்கு ஒரே நாளில் 9000MT அளவு ஆக்சிஜன் தேவைப்பட்டால் அதனை எளிதாக உற்பத்தி செய்துவிட முடியும். ஆனால் உற்பத்தி செய்த ஆக்சிஜனை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல நேரம் அதிகமாக தேவைப்படுகிறது.

ஆனால் அதையும் மத்திய அரசு எவ்வளவு விரைவாக மேற்கொள்ள முடியுமோ அவ்வளவு விரைவாக மேற்கொண்டு மாநிலத்தில் ஏற்படும் ஆக்சிஜன் பற்றாக்குறையை சரி செய்தது. மாநிலத்தில் உள்ள குறையை மறைப்பதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் மோடி ஒருவரையே குற்றம் சாட்டி வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதோடு எதிர்க் கட்சியின் மீது உள்ள நம்பிக்கையையும் குறைக்கும் விதமாகவே காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.

Similar News