90ஸ் கிட்ஸின் மனம் கவர்ந்த தொகுப்பாளரும், நடிகருமான ஆனந்த கண்ணன் மரணம்!

90ஸ் கிட்ஸின் மனம் கவர்ந்த தொகுப்பாளராக விளங்கியவர் ஆனந்த கண்ணன். இவர் நகைச்சுவை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

Update: 2021-08-17 03:25 GMT

90ஸ் கிட்ஸின் மனம் கவர்ந்த தொகுப்பாளராக விளங்கியவர் ஆனந்த கண்ணன். இவர் நகைச்சுவை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

மேலும், தமிழில் பிரபலமான சிந்துபாத் சீரியலில் நாயகனாக நடித்த இவர், சரோஜா, அதிசய உலகம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், சமீபகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆனந்த கண்ணன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணம் திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source: Maalaimalar

Image Courtesy: Malaimalar



Tags:    

Similar News