தடுப்பூசி செலுத்திக் கொண்ட மக்கள் தொகை குறித்து பீதியைப் பரப்ப முயலும் பொருளாதார நிபுணர் கௌசிக் பாசு!
வெள்ளிக்கிழமை அன்று சமூக வலைத்தளங்களில் கார்னெல் பல்கலைக்கழகத்தின் பொருளியல் பேராசிரியரும் மற்றும் காங்கிரஸ் அனுதாபியுமான கௌசிக் பாசு ஒரு சர்ச்சையைக் கிளப்பினார். அதில் இந்தியாவில் மக்கள்தொகையில் மொத்தம் 1.5 சதவீதம் பேரே தடுப்பூசி செலுத்திக்கொண்டதாகக் கூறியுள்ளார்.
அவரது டிவிட்டில், "தவறான நிர்வாகமாக உள்ளது. உலகின் மருந்தகமாகத் திகழும் நாட்டில் 1.5 சதவீதம் மக்கள் தடுப்பூசி செலுத்தி இருப்பது, தடுப்பூசி போடுவதில் தோல்வியுற்றுள்ளது," என்று பத்திரிகையாளர் ஒரு எழுதிய துண்டு பிரச்சாரத்துக்குப் பதிலளித்தார்.
இவரது குற்றச்சாட்டு கொரோனா வைரஸ்கு எதிராகத் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கைக்கு எதிராக உள்ளது. ஏப்ரல் 22 இரவு எட்டுமணிவரை 135 மில்லியன் நபர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
கொரோனா வைரஸ்கு எதிராக ஒரு தனி நபர் இரண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம். அதன் பிறகே ஒருவர் முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாகக் கணக்கிடப்படும். தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் தகவலின் படி, 114 மில்லியன் நபர்கள் முதல் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டுள்ளனர் மற்றும் 20 மில்லியன் நபர்கள் இரண்டாவது தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டுள்ளனர்.
இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 136 கோடியாக உள்ளது, அதில் 8.45 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும் 1.49 சதவீதம் பேர் முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். கௌசிக் குற்றச்சாட்டு முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கையாக இருந்தாலும் அவரது டிவிட்டில் அவர் தெளிவாகக் குறிப்பிடவில்லை. தடுப்பூசி திட்டம் ஜனவரி 16 இல் தொடங்கப்பட்டது, தொடங்கி மூன்று மாதங்களே ஆகின்றது. இந்தியாவில் பல கட்டமாகத் தடுப்பூசி திட்டத்தை நடத்தியதால், பலர் இரண்டாம் கட்டத்துக்குத் தகுதியற்றவர்களாக இருக்கின்றனர்.