இந்தியா வேற்று கிரகங்களுக்கும் மனிதர்களை அனுப்பும் பயணத்திட்டம் உண்மையா?
வேற்று கிரகங்களுக்கும் மனிதர்களை அனுப்பும் பயணத்திட்டத்தின் ஒரு பகுதியாக, லடாக்கில் உள்ள நகரில், புதிய சோதனைகளை இஸ்ரோ தொடங்கி இருக்கிறது.இஸ்ரோ சார்பில் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஆய்வுகள் தொடங்கி செயல்பட்டு வருகின்றன. மேலும் விண்வெளி மையம் ஒன்றை அமைக்கவும் இந்தியா முயற்சி மேற்கொண்டுள்ளது. வேற்று கிரகங்களுக்கு கலன்களை அனுப்பவும் அடுத்தடுத்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு அனுப்புவதற்காக விமானப்படையை சேர்ந்த மூன்று வீரர்களை தேர்வு செய்து, அவர்களுக்கான பயிற்சியை இஸ்ரோ கடந்த ஆண்டுகளில் இருந்து அளித்து வருகிறது. மேலும் இது தொடர்பாக விமானப்படையை சேர்ந்த மூன்று வீரர்களுக்கு இஸ்ரோ தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
அண்மையில் இந்தத் திட்டம் தொடர்பாக பேசிய இஸ்ரோ தலைவர் சோமநாத், பாதுகாப்பு மற்றும் திட்டத்தின் வெற்றியைக் கருத்தில் கொண்டு, ககன்யான் விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் என்று கூறியிருந்தார்.
Input & Image courtesy:News