விஜயதசமிக்கு வாழ்த்துக்கள் கூறிய TVK தலைவர் விஜய்.. பின்னணி என்ன தெரியுமா?

Update: 2024-10-11 17:08 GMT

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் விஜயதசமிக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். இந்த வாழ்த்து பதிவிற்கு பிறகு அந்த ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது. பிரபல நடிகராக இருக்கும் விஜய் அவர்கள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்து அரசியலில் களம் இறங்குவதாக அறிவித்திருந்தார்.


அப்பொழுதே 2026 சட்டமன்ற தேர்தல் தான் தன்னுடைய இலக்கு. அதற்காக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தான் அரசியலில் களம் இறங்குவதாகவும் அறிவித்தார். பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் கழக பாடலை வெளியிட்டு தமிழக அரசியலில் நுழைந்தார். கடந்த செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது விஜய் அவர்கள் வாழ்த்துக்கள் கூறவில்லை, பிறகு வந்த ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


அதாவது இந்து பண்டிகளுக்கு மட்டும்தான் விஜய் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறித்தான கருத்துக்கள் மிகவும் பரவப் பட்டு வந்தது. இந்நிலையில் விஜய் அவர்கள் தமிழக வெற்றிக்கழக அதிகாரப்பூர்வமான சமூக வலைதள பக்கங்களில் இன்று விஜயதசமிக்கு தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்து இருப்பது பெரும் வைரலாக காணப்பட்டது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News