தண்டவாளத்தில் கிடந்த கேஸ் சிலிண்டர்.. ரயிலை கவிழ்க்க சதி வேலையா.. பின்னணி என்ன?.

Update: 2024-10-14 02:29 GMT

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள தெந்தேரா ரயில்வே ஸ்டேஷன் அருகே, தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டர் கிடந்தது. தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டர் கிடந்ததை தொடர்ந்து அங்கு இருக்கும் மக்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து இருக்கிறார்கள். மேலும் விபத்து தற்போது தடுக்கப் பட்டிருக்கிறது. இதற்கு பின்னணியில் யார் இருக்கிறார்? என்பது தற்போது விசாரணையில் தெரிய வரலாம் என்று எதிர்பார்க்கிறது.


சரக்கு ரயிலை கவிழ்க்க சதி வேலை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். உத்தரகாண்ட் மாநிலம், தெந்தேரா ரயில் ஸ்டேஷன் அருகே, காஸ் சிலிண்டர் கிடந்தது. அந்த வழியாக வந்த, சரக்கு ரயிலின் லோகோ பைலட், காஸ் சிலிண்டர் கிடந்ததை அறிந்து, ரயிலை நிறுத்தினார். பின்னர், ரூர்க்கியில் உள்ள ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் கொடுத்தார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சிலிண்டர் முற்றிலும் காலியாக இருப்பதை கண்டுபிடித்தனர். இந்த காலி சிலிண்டர் தண்டேராவில் உள்ள ஸ்டேஷன் மாஸ்டரின் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர். சரக்கு ரயிலை கவிழ்க்க, காலி சிலிண்டரை வைத்தது யார் என்பது குறித்து அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News