இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே விமானங்களுக்கு வரக்கூடிய வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதிலும், குறிப்பாக விமானங்கள் கிளம்பிய பிறகு பல மிரட்டல்கள் வந்து கொண்டுள்ளன. இந்த பிரச்சினையை மத்திய அரசு, விமான நிறுவனங்கள், பயணிகளுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு முடிவு கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்றும் 18 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. விஸ்தாரா, ஆகாசா ஏர் விமானங்களுக்கு மிரட்டல் வந்துள்ளது. இதனை அந்த விமான நிறுவனங்களின் தலைவர்கள் உறுதி செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணையும் மேற்கொண்டு வருகிறார்கள். தொடர்ச்சியாக வரும் வெடிகுண்டு மிரட்டல்களுக்கு காரணம் என்ன என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மிரட்டல் வந்த விமானங்களில் லக்னோவில் இருந்து மும்பைக்கு பறந்த ஏர் ஆகாசா விமானமும் ஒன்று. இது தொடர்பாக தங்களது அதிகாரிகள்,பாதுகாப்பு நிபுணர்களுடன் தொடர்பில் உள்ளதாகவும், உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ஏர் ஆகாசா நிறுவனம் கூறியுள்ளது.
Input & Image courtesy: News