வலிப்பால் இறந்தவரை, கொரோனா ஊசி போட்டு இறந்ததாக செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" ஊடகம்! பத்திரிக்கை சுதந்திரம் காற்றில் பறக்கிறதா?

Update: 2021-04-27 01:15 GMT

வலிப்பு நோயின் காரணமாக ஒருவர் இறந்ததை, கொரோனா ஊசி போட்டு இறந்ததாக சித்தரித்து தினத்தந்தி ஊடகம் செய்தி வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் புவனகிரி பூங்காவனத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவப்பிரகாஷ். இவருக்கு வயது 25வயதாகிறது.  இவர் கடலூர் சிப்காட்டில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சிறு வயதில் இருந்தே வலிப்பு நோய் இருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று காலையில் சிவப்பிரகாஷ், வீட்டில் இருந்தபோது திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது. இதையடுத்து அவரை உறவினர்கள் சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிவப்பிரகாசை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சிவப்பிரகாசின் உடலை முழுமையாக பரிசோதனை செய்த பின், கொரோனா தடுப்பூசி போட்டதால் அவர் இறந்திருக்க மாட்டார் என்று தெரிவித்தனர். 

இதனை தடுப்பூசியுடன் தொடர்புபடுத்திய தினத்தந்தி ஊடகம், கொரோனா தடுப்பூசி போட்ட மறுநாளில் தனியார் நிறுவன ஊழியர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியதாக செய்தி வெளியிட்டு மக்களிடையே பீதியை ஏற்ப்படுத்தியுள்ளது.

இக்கட்டான இந்த சூழ்நிலையில் மக்களிடம் நம்பிக்கை விதைக்க வேண்டிய ஊடகங்கள், இப்படி செய்தி பரபரப்புக்காக கீழ்த்தரமாக நடந்துகொள்வதை தடுக்க வேண்டும் என்றால், ஊடகம் தணிக்கை கட்டாயம் வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். 

Similar News