இண்டியா கூட்டணிக்கு ஆதரவாக பிரதமர் மோடியின் பதிவா? பின்னணி உண்மை என்ன..
2024 லோக்சபா தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த உடனேயே, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தன்னுடைய x பக்கத்தில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக எக்ஸ் வலைதள பக்கங்களில் கருத்துக்களை தெரிவித்து இருந்தார். ஆனால் இதை காங்கிரஸ் கட்சியினை சேர்ந்தவர் சிலர் வேண்டுமென்றே பொய்யாக சித்தரித்த சமூக வலைத்தளங்களில் சில பதிவுகளை பகிர்ந்து இருக்கிறார்கள் "இந்திய கூட்டணிக்கு" வாக்களிக்க "அதிக எண்ணிக்கையில்" மக்கள் வந்ததாக பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக ஒரு சமூக ஊடக பதிவு வெளிவந்தது. இந்தப் பதிவில் X-இல் மோடியின் கணக்கில் இருந்து ஒரு பதிவின் ஸ்கிரீன் ஷாட் உள்ளது.
அதில் “முதல் கட்டம், சிறந்த பதில்! இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்களைப் பெறுகிறது. இந்தியா முழுவதிலும் உள்ள மக்கள் சாதனை எண்ணிக்கையில் இண்டியாவுக்காக வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாகிறது" என்ற கருத்து இடம் பெற்று இருந்தது. இந்த ஒரு பதிவை இந்தியா வித் காங்கிரஸ் என்ற அக்கவுண்டை வைத்திருப்பவர்கள் வைரலான பதிவைப் பகிர்ந்துள்ளனர். இந்தப் பதிவில் தலைப்பில், “மோடி ஜி வெளியேறும் கருத்துக்கணிப்பு எண்களைப் பெற்றுள்ளார். இது நாடு முழுவதும் மக்கள் அதிக எண்ணிக்கையில் NDA க்கு எதிராக வாக்களித்ததாகக் கூறுகிறது.
இருப்பினும், இந்த கூற்று தவறானது. இண்டியா கூட்டமைப்பிற்கு அதிக எண்ணிக்கையிலான மக்கள் வாக்களித்துள்ளதாக பிரதமர் மோடி கூறியதாக பொய்யான கூற்றுடன் ஜோடிக்கப்பட்ட ஸ்கிரீன் ஷாட் பகிரப்பட்டுள்ளது. உண்மையில், பிரதமரின் அதிகாரப்பூர்வமான எக்ஸ் வலைதள பக்கங்களில் அவர், "மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு NDA வாக்களித்துள்ளனர்" என்று கூறினார். முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்த பிறகு, ஏப்ரல் 19 அன்று இரவு 9.33 மணிக்கு ஒரு பதிவில் அவர் கூறும் பொழுது, “முதல் கட்டம், சிறந்த பதில்! இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்களைப் பெறுகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள்" என்பது தெளிவாகிறது.
Input & Image courtesy: ABP News