கோவிலுக்குள் சென்ற தலித் இளைஞருக்கு தூக்குத்தண்டனையா.. வைரல் செய்தியின் உண்மை என்ன..

Update: 2024-05-05 15:44 GMT

சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தியை மக்கள் அது உண்மையா? இல்லையா? என்பது கூட விசாரிக்காமல் அது பற்றி ஆய்வு கூட செய்யாமல் மற்றவர்களுக்கு விரைவாகப் பகிர செய்கிறார்கள். இதன் காரணமாக பல தவறான தகவல்கள் கூட உண்மையாக பல்வேறு மக்களை சென்று அடைகிறது. குறிப்பாக எந்த செய்தி உண்மை என்பதை நம்புவதற்கு மக்கள் தற்போது பயப்படுகிறார்கள். அந்த வகையில் ராஜஸ்தானில் ஒரு கோவிலுக்குள் தலித் இளைஞன் சென்ற காரணத்தினால் அந்த ஊர் மக்கள் அந்த இளைஞனை தூக்கிலிட்டதாக தகவல்கள் வைரலானது.


ராஜஸ்தானில் தலித் இளைஞர் கோவிலுக்குள் சென்றதால் உயர் சாதியினர் அந்த இளைஞரைத் தூக்கிலிட்டு கொலை செய்தனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்பதை கூட அறியாமல் இங்கு இருக்கும் நபர்கள் கூட இதை பகிர்ந்து வருகிறார்கள். இது தொடர்பாக உண்மை செய்திகளை கண்டறியும் முயற்சியில் களம் இறங்கி அது முற்றிலும் போலியானது என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.


ராஜஸ்தான் மாநிலத்தில் இப்படி ஒரு நிகழ்வு நடக்கவில்லை என்றும், யாரோ வேண்டுமென்று மக்கள் மத்தியில் இத்தகைய குழப்பங்களை ஏற்படுத்த வேண்டும் என்று இந்த ஒரு செய்தியை பகிர்ந்து இருக்கிறார்கள் என்று ராஜஸ்தான் போலீஸ் தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஒரு போலியான தகவல்களை யாரும் நம்பி மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News