PMAY திட்டம் பற்றி நான் சொன்ன புள்ளி விவரம் தப்பு: டுவீட்டை நீக்கி வருத்தம் தெரிவித்த திமுக செய்தித்தொடர்பாளர்!

Update: 2024-02-28 01:17 GMT

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் குறித்து தான் வெளியிட்ட பதிவில் பிழை இருப்பதாக கூறி நீக்கிவிட்டு வருத்தம் தெரிவித்துள்ளார் திமுக செய்தித்தொடர்பு மாநில இணை செயலாளர் சையது ஹபீசுல்லா. பிரதமர் வீடு திட்டம்.. 35% வீடுகள் 10% உயர்சாதியினருக்கே வழங்கப்படுவதாக கூறி இருந்தார். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் EWS என்பது வேறொரு அர்த்தத்தை குறிக்கிறது. நான் முன்பு வெளியிட்ட ட்வீட் நிதி மற்றும் கல்விக்காக வழங்கப்படும் EWS இடஒதுக்கீட்டை குறித்துள்ளது. இந்த பிழைக்கு நான் முழு பொறுப்பேற்றுக் கொள்கிறேன். மன்னிக்கவும்." என்று குறிப்பிட்டுள்ளார்.

உண்மை என்ன?

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் நகர்ப்புறங்களில் வீடுகள் கட்ட கடன் தொகை வழங்கும் வகையில் குடியரசு தலைவரின் அனுமதி பெற்று ₹456,26,00,000 தொகை கடந்த 24/03/2023 அன்று ஒதுக்கப்பட்டது. National Housing Bank தான் Central Nodal Agency என்பதால் அதன் வழியாக Credit Linked Subsidy Scheme மூலமாக பொருளாதார ரீதியாக நலிந்தோருக்கு வீடுகள் கட்டித்தரும் நோக்கில் இந்த தொகை PMAY - U திட்டத்தின் கீழ் செலவிடப்படுகிறது.

இந்த தொகை வங்கிகள் நோக்கி வரும் விண்ணப்பங்களின் அடிப்படையில் ஒவ்வொன்றாக பரிசீலிக்கப்பட்டு வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டு தொகை வங்கிக் கணக்கில் போடப்படும்.

EWS category-ல் SC / ST / OBC என அனைத்து தரப்பினருக்கும் வீடுகள் ஒதுக்கப்படுகின்றன. எப்படி ஏற்கனவே reservation நடைமுறையில் இருக்கிறதோ அது போலத்தான் இதிலும் அனைவருக்கும் ஒதுக்கீடுகள் உள்ளன. இதில் எவ்வித பாகுபாடும் இல்லை.

இது தொடர்பாக ஜனவரி 8 & 9 தேதிகளில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. மேலும், ஜனவரி 14, 2017ல் சட்டமாக வடிவம் பெற்றது.

திமுக செய்தித்தொடர்பாளர் சொல்வது போலவும் இணைய உடன்பிறப்புகள் சொல்வது போலவும் எந்த பாகுபாடும் பார்க்கப்படுவது இல்லை.

CLSS என்பது PMAY - Urban திட்டத்தின் கீழ் வரும் 4 பிரிவுகளில் ஒன்று. நடுத்தர வர்க்கத்தினருக்காக ( Middle Income Groups) இந்த பிரிவு கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் செயல்பாட்டில் உள்ளது.

தமிழகத்தில் PMAY - Urban திட்டத்தின் கீழ் 6.8 லட்சம் வீடுகளும் ₹11,259 கோடி ரூபாய் தொகையும் மத்திய அரசால் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டது.       


Similar News