கர்நாடக மக்கள் பாவம் செய்ததாக மோடி குற்றம் சாட்டினாரா.. வைரல் கிளிப்பின் உண்மை என்ன..

Update: 2024-04-30 11:39 GMT

பிரதமர் நரேந்திர மோடி, மாபெரும் மக்கள் கூட்டத்தில் உரையாற்றும் போது, ​​கர்நாடக மக்கள் பாவம் செய்து விட்டதாக குற்றம் சாட்டினார் என்று தொடர்ச்சியான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அது பற்றிய உண்மை நிலை என்ன? பிரதமர் நரேந்திர மோடி பிரச்சார உரையின் போது கர்நாடக மக்களை "பாவிகள்" என்று அழைத்தாரா? லோக்சபா தேர்தலின் மூன்றாம் கட்டத்திற்கு மக்கள் தயாராகி வரும் நிலையில், பிரதமர் மோடியின் வீடியோவை சமூக ஊடகங்களில் பலர் பகிர்ந்துள்ளனர் . அதில், “கர்நாடக மக்களை” பாவம் செய்ததற்காக தேர்தலின் போது தண்டிக்க வேண்டும் என்று மோடி கூறியதாக வீடியோ வைரல் ஆகி வருகிறது. ஆனால் அது முற்றிலும் போலியானது.


அந்த வீடியோவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த ஒருவர், “எதிர்பார்த்தபடியே, பாஜகவை ஆதரித்தவர்களைக் கூட விட்டுவைக்காமல், இப்போது ஒட்டுமொத்த மாநிலத்தையும் தாக்கி வருகிறார் என்று ஒரு நபர் பேஸ்புக்கில் இது தொடர்பான வீடியோவை வைரல் செய்து இருக்கிறார். உண்மைச் சோதனையில் வீடியோ கிளிப் எடிட்டிங் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

முழு வீடியோவில், பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பதைக் காணலாம், கர்நாடக மக்களை அல்ல. பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 28 அன்று கர்நாடகாவின் பெலகாவியில் ஒரு பேரணியை நடத்தினார், அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்து மன்னர்களை அவமதிப்பதாகவும், முஸ்லிம் ஆட்சியாளர்களை மகிமைப் படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார். இதன்மூலம், பிரதமர் நரேந்திர மோடியின் கிளிப் செய்யப்பட்ட வீடியோ, கர்நாடக மக்கள் பாவம் செய்ததாக குற்றம் சாட்டுவதாக பொய்யாகக் கூறுவதற்காக பகிரப்பட்டது தெளிவாகிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News