சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கை குழப்பத்தைத் தூண்டும் விதமாகப் பரவலாகப் பரவப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை மாலை தெலுங்கானா அரசாங்கம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், தற்போது மாநிலத்தில் ஒரு பகுதி ஊரடங்கு உத்தரவு செயல்படுத்தப் போவதாகக் கூறப்படுவது போலியான செய்தியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அரசாங்க அறிக்கையானது மாநிலத்தின் தலைமைச் செயலாளர் சோமேஷ் குமார் அவர்களால் வெளியிடப்பட்டது.
"ஏப்ரல் 1 முதல் மாநிலத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் பூட்டப் போவதாக ஒரு கையொப்பமிடாத ஆவணம் சமூக ஊடகத்தில் பரப்பப்பட்டு வருவது அரசாங்கத்தின் கவனத்திற்கு வந்தது. தற்போது வெளியிட்ட ஆவணத்தின் மூலம் பரப்பப்படும் செய்தி போலியானது என்று தெரிவிக்கப்படுகின்றது. இதுபோன்ற ஒரு உத்தரவைத் தெலுங்கானா அரசாங்கம் வெளியிடவில்லை," என்று அவர் தெரிவித்தார்.
மேலும் இதே செய்தியைத் தலைமைச் செயலாளர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது, "வைரலாகி வரும் ஆவணம் போலியானது மற்றும் தெலுங்கானா அரசாங்கம் இதுபோன்ற ஆவணத்தை வெளியிடவில்லை," என்று கூறப்பட்டிருந்தது. மேலும் தலைமைச் செயலாளரும் ஊரடங்கு பரிசீலிக்கப்படவில்லை என்று தெளிவுபடுத்தினார்.
சில குற்றவாளிகள் போலியான அரசாங்க ஆவணத்தைத் தயாரித்துப் பரப்பி வருகின்றனர், இது போலியானது மற்றும் இதனைப் பகிரவேண்டாம் என்று மக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகின்றது என்று தெலுங்கானா டிஜிட்டல் மீடியா இயக்குநர் கோனாதம் திலீப் வலியுறுத்தினார். இதுபோன்ற வதந்திகள் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.