பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்காதவர்களுக்கு 10,000 ரூபாய் அபராதம் என்ற செய்தி உண்மையா?

Update: 2021-04-03 05:01 GMT

தற்போது இரண்டு நாட்களுக்கு முன்னதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரபரப்பாகப் பரப்பப்பட்டு வந்தது. அதில் மார்ச் 31 2021 பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்கக் கடைசி தேதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அவ்வாறு இணைக்காதவர்களுக்கு 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று குறிப்பிடபட்டிருந்தது.


இதனைத் தொடர்ந்து பல்வேறு சமூக ஊடக பயனாளர்களுக்கு,"பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைப்பதற்குக் கடைசி தேதி மார்ச் 31 2021. மேலும் அவ்வாறு இணைக்காதவர்களுக்கு பான் கார்டு செல்லாது. கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் இரண்டு ஆவணங்களையும் இணைக்கவிட்டால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்," என்று கூற்றுடன் பகிரப்பட்டு வந்தது. இதன் சம்பந்தமான இடுக்குகளை பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் காணமுடிந்தது.

மேலும் பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்காதவர்களுக்கு அபராதமாக 10,000 விதிக்கப்படும் என்ற செய்தியை எந்த ஊடக அறிக்கைகளிலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் இந்தியா டுடே மார்ச் 31 2021 வெளியிட்டிருந்த செய்தி அறிக்கையில், பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்காதவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் என்று கூறப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது. இந்த அபராதமானது வருமான வரி சட்டம் 1961 கீழ் விதிக்கப்படுகின்றது. 2021 மக்களவையில் நிதி மசோதாவை நிறைவேற்றும் போது மார்ச் 23 இல் இந்த உத்தரவை அரசாங்கம் பிறப்பித்தது.

ஒரு நபர் தனது பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைப்பது வருமான வரி சட்டம் 1961 கீழ் அவசியமானது ஆகும். ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்காவிட்டால் பான் கார்டு செல்லாது மற்றும் வங்கியில் கணக்குகளைத் தொடங்குவதற்கும் மற்றும் 50,000 க்கு மேல் பணப்பரிமாற்றம் செய்பவர்களுக்கு பான் கார்டு அவசியமானது ஆகும்.

அதே நேரத்தில் வருமான வரி சட்டம் 272(B) கீழ் விதிகளைப் பின்பற்ற அதிகாரி தவறிவிட்டால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கலாம்.




மேலும் வருமான வரி பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்கக் கடைசி தேதியை மார்ச் 31 2021 இல் இருந்து ஜூன் 30 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கெடு நீட்டிப்பானது இந்தியாவில் கொரோனா தொற்றுநோய் அதிகரிப்பால் எடுக்கப்பட்டுள்ளது.

Similar News