8 நாளில் இந்தியாவே திணறும் என்றார் ராகுல்! இப்போ 40 நாட்களை கடந்துவிட்டது.. என்ன பதில் சொல்லப்போகிறார்?

Update: 2022-06-04 02:46 GMT

கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி, இந்தியாவில் 8 நாட்களுக்கு உண்டான நிலக்கரி மட்டுமே உள்ளது என்றும், நிலக்கரி பற்றாக்குறையால் மின்வெட்டு ஏற்பட்டு, இந்தியா முழுக்க தொழில்கள் அடிவாங்கும். அதனால் வேலை இழப்பு ஏற்படும் என்றார். அவர் சொல்லி 40 நாட்கள் கடந்துவிட்டது. அப்படியென்றால், இது நாள் வரையில் கூறியது எல்லாமே இதுபோன்ற பொய்யுரைகள் தானா? என்ற சந்தேகம் வருகிறது. 

உண்மையில் நடந்தது என்ன?

இந்தியாவில் உள்ள 173 அனல்மின் நிலையங்களில் மின்சார உற்பத்திக்கு நிலக்கரிதான் ஆதாரமாக உள்ளது. அனல்மின் நிலையங்களுக்காக நிலக்கரி சுரங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரி தவிர, வெளிநாடுகளில் இருந்தும் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் உள்நாட்டிலேயே நிலக்கரி உற்பத்தி அதிகரித்துள்ளதால் வெளிநாட்டு இறக்குமதி குறைந்துள்ளதாக மத்திய நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2020-21 ஆம் நிதியாண்டில் 71.6 கோடி டன்னாக இருந்த அகில இந்திய அளவிலான நிலக்கரி உற்பத்தி, 2021-22 ஆம் நிதியாண்டில் 77.7 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.



Similar News