6 மாதமாக ஜிஎஸ்டி இழப்பீடு வரலையா? திமுகவினர் இப்படி ஏக்கர் கணக்கில் பொய் சொல்லக்கூடாது!
பரவிய தகவல்:
உண்மை என்ன?
மத்திய அரசின் ஒருமுக வரி விதிப்பு முறையாக சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) 2017ம் ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வரி விதிப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு அளிக்கும் என அப்போது தெரிவிக்கப்பட்டது. இதன்படி 2022 ஜூலை மாதம் வரை இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு நிதி ஆண்டுகளாக ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை மாநில அரசுகள் கடனாக திரட்டிக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஜிஎஸ்டி இழப்பீடை ஈடு செய்வதற்காக சில பொருள்கள் மீது செஸ் விதிக்க அனுமதி வழங்கப்பட்டது. செஸ் மூலம் கிடைக்கும் வருவாய், இழப்பீடாக மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு முறையால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை சமாளிக்க விதிக்கப்படும் செஸ் வரி மார்ச் மாதம் 2026ம் ஆண்டு வரை தொடரும் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. ஜிஎஸ்டி இழப்பீடு நடைமுறை கடந்த ஆண்டு அதாவது ஜூன் மாதம் 2023 முதல் நிறுத்தப்பட்டது என்பது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் அறிவார்களா?
ஆனால், அதற்கு முன்னதாக மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீடு நிலுவை தொகை மொத்தமாக ரூ.16,982 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்படுவதாக டெல்லியில் நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் 49-வது கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவித்து இருந்தார். இதில் தமிழகத்துக்கு இழப்பீடாக ரூ.1,201 கோடியும், புதுச்சேரிக்கு ரூ.73 கோடியும் விடுவிக்கப்படும் என அப்போது தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது நடைமுறையில் இல்லாத ஒன்றை எப்படி? எங்கிருந்து தருவார்கள்? இது கூடவா ஒரு மாநில நிதி அமைச்சருக்கு தெரியவில்லை? அரசியல் செய்ய எப்படி வேண்டுமானாலும் பொய் மூட்டை அவிழ்த்துவிடலாம் என நினைத்துவிட்டார்கள் போலிருக்கு.