பெண்களால் மட்டுமே இயக்கபட்ட ஆக்ஸிஜன் விரைவு ரயில் - சுவாரசிய தகவல்!

Update: 2021-05-23 02:15 GMT

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்சிலிருந்து மீள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது . இந்தியாவும் தனது முயற்சியை கைவிடாமல் பல நவீன மருத்துவ முறைகளை மட்டும் அல்லாமல் ஆயுர்வேதா, சித்தா போன்ற பாரம்பரிய மருத்துவ முறையையும் பயன்படுத்தி நோய் தொற்றில் இருந்து மீள்வதற்கான முயற்சியை எடுத்துக்கொண்டு வருகிறது. மக்கள் அனைவரையும் இந்தியாவிலேயே தயாரித்த தடுப்பு ஊசியான கோவிட்ஷீல்டு மற்றும் கோவஸ்க்சின் ஆகியவற்றை இரண்டு டோஸேஜ் எடுத்துக் கொள்ளுமாறு கூறி இருக்கிறது .


தற்போது நாடு முழுவதும் ஆக்ஸிஜனுக்கான தேவை அதிகமாகி இருக்கும் நிலையில் பெண்களால் மட்டுமே இயக்கபட்ட  ஏழாவது ஆக்ஸிஜன் விரைவு ரயில் பெங்களூர் வந்து அடைந்தது. இந்த செய்தியை ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

அந்த பதிவில் "பெண்களால் இயக்கப்பட்ட இந்த ஏழாவது ஆக்ஸிஜன் விரைவு ரயில் கர்நாடகா  மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு தடையில்லா ஆக்ஸிஜன் விநியோகத்தை உறுதிபடுத்தும்" என்று அவர் குறிப்பிட்டு இருந்தார். 


எல்லா துறைகளிலும் ஆண்களுக்கு இணையாக பெண்களும் சாதித்து வருகிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. எனினும் இந்த கொரோனா பேரிடர் காலத்திலும் பாரதி கண்ட புதுமை பெண்ணாக கொரோனா நோயால் பாதிக்கபடுவோர்க்கு ஆக்ஸிஜன் விநியோகத்தில் ஈடுபட்ட பெண்களுக்கும் நம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். இப்பெண்களை நாம் நமது முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டால் நமது வருங்கால சமுதாயம் நல்ல பாதையில் பயணிக்கும்.

Tags:    

Similar News