1.6 கோடிக்கும் மேல் தடுப்பூசிகள் மாநிலங்களிடம் கையிருப்பு - மத்திய அரசு!
கொரோனா தொற்றுக்கு எதிராக நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் இயக்கம் விரைவாக நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் தற்போது 1.60 கோடி கொரோனா தடுப்பூசி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் இன்னும் இருப்புகள் உள்ளன, மேலும் அடுத்த மூன்று நாட்களில் 2.67 லட்சம் டோஸ் அனுப்பப்படும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை அன்று தெரிவித்துள்ளது.
மேலும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 21 கோடி தடுப்பூசிகளை வழங்கியுள்ளதாக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இதில், மே 21 2021 வரை மொத்தமாக வீணானது உட்பட 19,73,61,311 டோஸ் வழங்கப்பட்டுள்ளது," என்றும் அது தெரிவித்துள்ளது.
"மேலும் 1.60 கோடி கொரோனா தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருப்புகள் இன்னும் உள்ளன," என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் 2,67,110 தடுப்பூசி டோஸ்கள் தயாராக உள்ளது இன்னும் மூன்று நாட்களில் அது அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
Source: Economic Times