தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்ட 474 கட்சிகள்!! தமிழகத்தில் இத்தனை கட்சிகள் ரத்தா??

Update: 2025-09-21 16:05 GMT

இந்தியாவைப் பொறுத்தவரை தேசிய கட்சிகளில் பாஜக காங்கிரஸ் உட்பட ஆறு கட்சிகளும், 67 மாநில கட்சிகளையும் தேர்தல் கமிஷன் அரசியல் கட்சியாக அங்கீகாரம் செய்துள்ளது.

இந்த கட்சிகளை தவிர்த்து கிட்டத்தட்ட 3 ஆயிரம் சிறிய கட்சிகள் பதிவு செய்து இருந்து வந்த நிலையில் தற்பொழுது இந்தக் கட்சிகள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெறாத கட்சியாக இருந்து வருவதாகவும், இந்த கட்சிகள் கடந்த ஆறு ஆண்டுகளாக எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிடாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் எந்தவித தேர்தல் தொடர்புடைய கணக்குகளையும் தாக்கல் செய்யாமல் இருப்பதால் இது போன்ற கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன் அடிப்படையில் 474 நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் அதிகாரத்தை ரத்து செய்தது. இந்த ரத்து செய்த கட்சிகளில் 42 கட்சிகள் தமிழகத்தை சேர்ந்தது என்றும், மீதமுள்ள கட்சிகள் மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ரத்து செய்த கட்சிகளுக்கு சரியான விளக்கம் அளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பியும் சரியான பதில் கிடைக்காததால் இதுபோன்று நடவடிக்கை மேற்கொண்டதாக தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்படுகிறது. 

Tags:    

Similar News