இன்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு!! இத்தனை பொருள்களின் விலை குறைந்துள்ளதா?

Update: 2025-09-22 08:03 GMT

ஜிஎஸ்டி வரி மறுசீரமைப்பு மத்திய அரசு அறிவித்தபடி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த வரி மறுசீரமைப்பினால் 375 பொருள்களின் விலை முன்பு இருந்ததை விட தற்பொழுது குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே இந்த ஜிஎஸ்டி வரியானது 5%, 12%, 18%, 28% என்று விதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது பல்வேறு பொருட்களின் வரியை மறு சீரமைப்பு செய்து வெறும் இரண்டே அடுக்குகளாக வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி இனி பொருள் மற்றும் சேவைக்காக அளிக்கப்படும் வரிவிதிப்பில் 5% மற்றும் 18% இரண்டு அடுக்குகளாக மட்டுமே விதிக்கப்படும் என்று மாற்றப்பட்டுள்ளது. முதலில் 28% வரிவிதிப்பில் இருந்த 90 சதவீத பொருட்களுக்கு 18% வரி விதிக்கப்படுவதாக மாற்றப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் உணவு பொருட்கள் வாகனங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என 375 பொருட்களின் விலை குறைந்துள்ளது. மேலும் அன்றாட தேவைக்கு வீடுகளில் பயன்படுத்தும் பொருட்களான நெய் பன்னீர் வெண்ணை போன்ற பொருள்களில் தொடங்கி பழங்கள், காபி பவுடர் போன்ற சில பொருட்கள் வரை விலை குறைந்துள்ளது.

மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த உபகரணங்கள் ஆகியவற்றிற்கு 5% என குறைக்கப்பட்டுள்ளது. சிமெண்ட் போன்ற கட்டுமான பொருட்களுக்கு ஏற்கனவே 28% என இருந்த வரியை குறைத்து தற்பொழுது 18% என்ன குறைத்திருப்பது வீடு கட்டுபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்களில் தொடங்கி மொத்தம் 375 பொருட்களுக்கு தற்பொழுது பொருள் மற்றும் சேவை ஜிஎஸ்டி வரி குறைந்துள்ளது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

Tags:    

Similar News