உக்ரைன் போர் குறித்த திட்டம் என்ன? அமெரிக்காவின் அதிக வரியால் ரஷ்ய அதிபரிடம் பிரதமர் மோடி கேள்வி!!
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% அமெரிக்கா வரி விதித்துள்ளது. இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவிற்கு கூடுதலாக வரி விதிக்கப்பட்டதாகவும், மற்றபடி அமெரிக்காவுக்கும் இந்தியாவிற்கும் இடையில் நல்லுறவு நீடிக்கிறது என்றும் மோடி தன்னுடைய நண்பர் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறினார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவின் வரி விதித்தால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக என்ன முடிவு எடுத்துள்ளீர்கள் என்று ரஷ்ய அதிபரான புதினிடம் கேட்டதாக நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட் கூறியுள்ளார்.
ஆனால் இது குறித்து எந்தவித பதிலும் மத்திய அரசு வெளியிடவில்லை. ஏற்கனவே வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த நிலையில் பிரதமர் மோடி புதினிடம் கேள்வி எழுப்பியிருப்பதாக வெளியாகி உள்ள தகவல் பரவி வருகிறது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் இந்தியா ரஷ்யாவிற்கு உக்ரைன் மீது போர் தொடுப்பதற்கு உதவியாக இருப்பதாக அமெரிக்க அதிபர் குற்றம் சாட்டினார். இந்நிலையில் இந்தியாவிற்கு அதிக வரி அமெரிக்கா விதித்தது.
இதை எதிர்த்து இந்திய அரசு அமெரிக்காவின் அதிக வரி விதிப்பு நியாயமற்றது என்றும், கச்சா எண்ணெய்யா ஏற்படும் தடங்கல்களை சரி செய்வதற்காக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது அவசியமாகியது என்று தொடர்ச்சியாக பல விளக்கங்களை இந்திய அளித்து வந்தது.
இதைத்தொடர்ந்து வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் மருந்துகளுக்கு 100% வரி உட்பட அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யும் சில பொருள்களுக்கு 50% வரி விதிக்கப் போவதாக அதிபர் ட்ரம்பின் அறிவிக்கை வெளியாகி சர்வதேச அளவில் அனைவருடைய கவனத்தையும் பெற்று வருகிறது.