வெற்றிகரமாக முடிந்த அக்னி - ப்ரைம் ஏவுகணை சோதனை!! வாழ்த்து தெரிவித்த அமைச்சர் ராஜ்நாத் சிங்!!

Update: 2025-09-26 08:34 GMT

மொபைல் லாஞ்சர் வழியாக ரயிலில் இருந்து 2000 கி.மீ. தூரத்தில் இருக்கும் இலக்கை தாக்கக்கூடிய அக்னி ப்ரைம் என்கின்ற ஏவுகணையை வெற்றிகரமாக ஏவியதற்கு வாழ்த்து தெரிவித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் ரயிலில் இருந்து கொண்டு மொபைல் லாஞ்சர் வழியாக அக்னி ப்ரைம் என்கின்ற ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக ஏவியுள்ளது. இந்த புதிய ஏவுகனையானது 2000 கி.மீ. தூரம் வரை இருக்கும் இலக்கை தாக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த அக்னி ப்ரைம் ஏவுகணையில் பல சிறப்பம்சங்களும் உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. நகரும் ரயிலிலிருந்து ஏவுகணைகளை பல நாடுகள் உருவாக்கிய நிலையில் தற்போது இந்தியாவும் அந்த வரிசையில் ஓடும் ரயிலின் மூலம் ஏவுகணைகளை ஏவும் அக்னி ப்ரைம் என்கின்ற ஏவுகணையை கண்டுபிடித்துள்ளது.

இந்த அக்னி - ப்ரைம் ஏவுகணையை டிஆர்டிஓ, எஸ்எஃப்சி மற்றும் ஆயுதப்படைகள் வெற்றிகரமாக சோதனை செய்ததற்காக தன்னுடைய வாழ்த்தை தெரிவித்துள்ளார். இது போன்ற ஏவுகணை ரயிலின் நெட்வொர்க்கை அடிப்படையாகக் கொண்டு நகரும் தன்மை கொண்டது. இதனால் நாடு முழுவதும் குறுகிய நேரத்தில் எதிர்வினையை தொடங்க முடியும் என்று ராஜ்நாத் சிங் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

Similar News