பழங்குடியின மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திய மோடி அரசு: மத்திய அமைச்சர் பெருமிதம்!

பழங்குடியினப் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு இருக்கிறது.;

Update: 2023-03-18 01:51 GMT
பழங்குடியின மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திய மோடி அரசு: மத்திய அமைச்சர் பெருமிதம்!

நாடு முழுவதிலும் உள்ள பழங்குடியின மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மத்திய அரசு முழுமையான வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பழங்குடியின மக்களுக்கு ஆதரவு அளிப்பது, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, விவசாயம், தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு, குடிநீர், திறன்மேம்பாடு மற்றும் வாழ்வாதாரம் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.


பழங்குடியின நல அமைச்சகத்தின் மூலம் பழங்குடியின மக்களின் சமூகப் பொருளாதார மேம்பாடு அடைவதற்கான நடவடிக்கைகள் ஒருங்கிணைந்த, நன்கு திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தத் தகவலை நாடாளுமன்றத்தில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிர்தி இரானி, எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் தொடர்ச்சியாக மத்திய அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பழங்குடியின மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்து இருக்கிறது. ஏனெனில் பழங்குடி இனத்தை சேர்ந்த பெண் தான் தற்பொழுது இந்தியாவின் ஜனாதிபதியாக உயர்ந்து இருக்கிறார். எனவே பழங்குடியின மக்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை நாம் இதிலிருந்து அறிந்து கொள்ள முடியும்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News