போலி செய்திகளைப் பரப்பியதற்காகக் காங்கிரஸ் தலைவர் உதித் ராஜ் மீது FIR பதிவு.!
போலி செய்திகளைப் பரப்பியதற்காகக் காங்கிரஸ் தலைவர் உதித் ராஜ் மீது FIR பதிவு.!
உத்தரப் பிரதேசம் உன்னாவ் பகுதியில் இரண்டு தலித் சிறுமிகள் மரணம் தொடர்பான வழக்கு குறித்து பொய்யான செய்திகளைப் பேசிய காங்கிரஸ் தலைவர் உதித் ராஜ் மீது உத்தரப் பிரதேச காவல்துறை சனிக்கிழமை அன்று வழக்குப் பதிவு செய்துள்ளது.
பிப்ரவரி 17 இல் இரண்டு தலித் சிறுமிகள் விவசாய நிலையத்தில் உயிருக்குப் போராடிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் இறந்துவிட்டார் மற்றும் ஒருவர் ஆபத்தான நிலையில் இருந்தார். காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து 48 மணிநேரத்தில் இரண்டு குற்றவாளிகளைக் கைது செய்தது.
இந்த சம்பவமானது ஒருதலை காதல் தொடர்பான பிரச்சனை என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான உதித் ராஜ், இரண்டு சிறுமிகளும் இறப்பதற்கு முன்பு கற்பழிக்கப்பட்டிருந்தனர் என்று ட்விட்டில் தெரிவித்திருந்தார். மேலும் இரண்டு சடலங்களும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அனுமதியின்றி அதிகாரிகள் எரித்துவிட்டனர் என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
இவர் ட்விட் செய்த அனைத்து செய்திகளும் போலியானவை. அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என்று பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டிருந்தது மற்றும் அவர்களது சடலங்கள் குடும்பத்தினரால் எரிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் அவரது போலி செய்திகளை ட்விட் செய்வதற்கு முன்பு இந்த தகவல்கள் அனைத்தும் முன்னரே பொதுக் களத்தில் இருந்தது.
உத்தரப் பிரதேச காவல்துறை ராஜ் மீது இந்தியத் தண்டனை சட்டம் 153 கீழ் மற்றும் 66IT சட்டம் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முன்னரும் பல முறை போலி செய்திகளைப் பரப்பியதில் ராஜ் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.