தொடர்ச்சியாக சீரழியும் சுகாதாரத்துறை:சென்னையை மட்டும் வைத்து பெருமை பேசும் திமுக!

Update: 2024-12-11 13:33 GMT

தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் செயல்படுகின்ற அரசு மருத்துவமனைகளில் பல அதிர்ச்சி சம்பவங்கள் நடக்கின்ற செய்திகள் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது அந்த வகையில் இன்றைய தினம் செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஒரு பெண்ணிற்கு பிரசவம் பார்த்ததால் அந்த குழந்தை இறந்துவிட்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய அந்த குழந்தையின் தந்தை பேசும்பொழுது கடந்த ஞாயிற்றுக்கிழமை என் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்தோம் அப்பொழுது மருத்துவர்கள் யாரும் இல்லை செவிலியர்களும் உதவியாளர்கள் மட்டுமே இருந்தனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு மூன்று மணி அளவில் பிரசவ வலியால் என் மனைவி அழுக ஆரம்பித்தால் நேரம் சொல்ல சொல்ல பிரசவ வலியும் அதிகமானது அதுவரை கழிப்பறையை சுத்தம் செய்து கொண்டிருந்த உதவியாளர் திடீரென்று என் மனைவிக்கு பிரசவம் பார்க்க ஆரம்பித்தார் பிறகு திடீரென்று எங்களை ஆம்புலன்ஸில் அனுப்பிவிட்டனர் ஆனால் ஆம்புலன்ஸில் கூட என்னை ஏற விடவில்லை பிறகு செங்கல்பட்டிற்கு அழைத்துச்சென்று விட்டனர் மறுநாள் காலை 8:00 மணி அளவில் என் குழந்தை பிறந்தது ஆனால் குழந்தை பிறந்ததற்கு பிறகு அந்த குழந்தையை என்னிடம் காட்டவும் இல்லை பிரசவத்திற்கு அறைக்குள் சென்ற செவிலியர்களும் வெளியே வரவில்லை ஆனால் என் குழந்தை சதுரங்கப்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த பொழுது இறந்துவிட்டது போதிய வசதிகள் இல்லையென்றால் ஆரம்பத்திலேயே இவர்கள் கூறியிருக்கலாமே தேவையில்லாமல் என் குழந்தையை கொன்று விட்டனர் இவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க பேசி உள்ளார் 

இதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்துவிட்டதாக வந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது குழந்தையின் பெற்றோர்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை

சமீபகாலமாக தமிழக சுகாதாரத் துறையில் இது போன்ற வருந்தத்தக்க சம்பவங்கள் அதிகமாகியிருக்கின்றன சென்னை போன்ற சில பகுதிகளில் மட்டும் மருத்துவக் கட்டமைப்பு மற்றும் மக்கள்தொகைக்கேற்ப மருத்துவர்கள் எண்ணிக்கை விகிதம் உலக சுகாதார மையத்தின் பரிந்துரையின்படி இருக்கிறதே தவிர தமிழகம் முழுவதும் பரவலாக இல்லை அதிக மக்கள்தொகை இருக்கும் நகரங்களில் கூட போதுமான எண்ணிக்கையில் அரசு மருத்துவர்கள் இல்லை சென்னையை மட்டும் வைத்து மருத்துவக் கட்டமைப்பில் முதலிடத்தில் இருக்கிறோம் என்று பெருமை பேசுவதோடு தங்கள் வேலை முடிந்து விட்டது என்று நடந்து கொள்கிறது திமுக அரசு

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து மக்களுக்கும் போதுமான கட்டமைப்பு இருக்கும்படி மருத்துவ வசதிகளையும் மருத்துவர் எண்ணிக்கைகளையும் பரவலாக்க வேண்டும் என்றும் தொடர்ந்து பொதுமக்களைப் பாதிப்புக்குள்ளாக்கும் தமிழக சுகாதாரத் துறையைச் சீரமைக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News