போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த விரும்பாமலும் பாஜக நிர்வாகிகளைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காக மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதா-அண்ணாமலை!
பூமி பூஜை நடைபெற்ற போது பாஜகவினர் கலந்துகொண்டனர் என்ற ஒரே காரணத்திற்காக புறக்காவல் நிலையம் அமைக்கக் கொடுத்த அனுமதியை ரத்து செய்துவிட்டு பொதுமக்கள் வரிப்பணத்தில் பாதிக்கும் மேல் நிறைவடைந்த கட்டுமானத்தை இடித்து தள்ளியிருக்கிறது கோவை திமுக மாநகராட்சி என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளனர்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 53வது வார்டு மசக்காளிபாளையம் பகுதியில் சிங்காநல்லூர் காவல் நிலையத்தின் புறக்காவல் நிலையம் அமைக்க பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கோவை மாநகராட்சியின் அனுமதி பெற்று கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த அந்தப் பகுதி மாநகராட்சி உறுப்பினர் மோகன் அவர்கள் அழைப்பின் பேரில் தமிழக முன்னாள் மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தமராமசாமி அவர்கள் தலைமையில் பாஜக நிர்வாகிகளும் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்
போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட இந்த புறக்காவல் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் பாதிக்கும் மேல் நிறைவடைந்த நிலையில் பூமி பூஜை நடைபெற்ற போது பாஜகவினர் கலந்துகொண்டனர் என்ற ஒரே காரணத்திற்காக புறக்காவல் நிலையம் அமைக்கக் கொடுத்த அனுமதியை ரத்து செய்துவிட்டு பொதுமக்கள் வரிப்பணத்தில் பாதிக்கும் மேல் நிறைவடைந்த கட்டுமானத்தை இடித்து தள்ளியிருக்கிறது கோவை திமுக மாநகராட்சி
புறக்காவல் நிலையம் அமைக்கப்படுவதாக இருந்த குறிப்பிட்ட அந்த இடத்தை திமுகவினருக்குத் தாரை வார்க்கும் எண்ணம் இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது பெருகி வரும் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த விரும்பாமலும் பாஜக நிர்வாகிகளைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காகவும் பாதி கட்டப்பட்ட காவல்நிலையக் கட்டுமானத்தை இடித்து பொதுமக்கள் வரிப்பணத்தை வீணடித்தும் சிங்காநல்லூர் புறக்காவல் நிலையத்தை அமைக்க விடாமல் தடுக்கும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன் உடனடியாக அதே இடத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்