திமுக அமைச்சர் பொன்முடி மீது கொந்தளிப்பை காட்டிய மக்கள்:திமுகவிற்கு நடக்கபோகும் நிலை!
தமிழகத்தில் விழுப்புரம் கிருஷ்ணகிரி புதுச்சேரி மற்றும் பல வட தமிழக மாவட்டங்களில் பிரெஞ்சு புயலால் ஏற்பட்ட பாதிப்பு அதிகமாக காணப்பட்டு வர தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுகவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் மேலும் மக்களும் திமுக அரசை நோக்கி கேள்விகளை முன்வைத்து வர பாஜக பாமக போன்ற பல கட்சியினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணங்களை அளித்து வருகின்றனர்
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தின் இருவேல் பட்டு பகுதிக்கு ஆய்விற்காக சென்ற அமைச்சர் பொன்முடி மற்றும் திமுக நிர்வாகிகள் மீது பாதிக்கப்பட்ட மக்கள் சேற்றை வாரி இறைத்து சாலை மறியலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ஏனென்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நிவாரணம் கொடுக்கப்படவில்லை என்பது பாதிக்கப்பட்ட மக்களின் கதறனாக உள்ளது தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வேதனைகளை கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
இந்த நிலையில் இதுதான் தமிழகத்தின் தற்போதைய நிலை முதல்வரும் துணை முதல்வரும் சென்னையின் தெருக்களில் புகைப்படம் எடுப்பதில் மும்முரமாக உள்ளனர் அதே நேரத்தில் சென்னையில் மிகக் குறைந்த மழை பெய்தது சென்னையைத் தாண்டி நடக்கும் நிகழ்வுகளைக் கண்காணிக்கத் தேவையில்லை என அவர்கள் நினைத்து விட்டனர் திமுகவின் ஊடகப் பிரிவாக டி.ஐ.பி.ஆர் நடந்துகொள்வதுடன் வெள்ளத்தின் உண்மைகளிலிருந்து மக்களை திசைதிருப்ப கோபாலபுரம் வாரிசுகளை விளம்பரப்படுத்துவதில் டிஐபிஆர் மும்முரமாக உள்ளது இது அரசின் அலட்சியத்தின் தெளிவான அறிகுறியாகும்
இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட ஊழல் திமுக அமைச்சர் பொன்முடியால் பொதுமக்களின் விரக்தி கொதிநிலையை எட்டியது திமுகவுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதற்கு இது ஒரு நல்ல நினைவூட்டல் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்