G20 டிஜிட்டல் பொருளாதார அமைச்சர்கள் கூட்டம்.. பிரதமரின் உரை..

Update: 2023-08-20 05:14 GMT

கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றம் முன்னெப்போதும் இல்லாதது. இது 2015 ஆம் ஆண்டில் எங்கள் டிஜிட்டல் இந்தியா முன்முயற்சி தொடங்கப்பட்டதிலிருந்து தொடங்கியது. புதுமையின் மீதான நமது அசைக்க முடியாத நம்பிக்கையால் இது இயக்கப்படுகிறது. விரைந்து செயல்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டால் இது இயக்கப்படுகிறது. மேலும், இது யாரையும் விட்டுவைக்காமல், நமது உள்வாங்கும் மனப்பான்மையால் உந்தப்படுகிறது.இந்த மாற்றத்தின் அளவு, வேகம் மற்றும் நோக்கம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. இன்று, இந்தியாவில் 850 மில்லியனுக்கும் அதிகமான இணைய பயன்பாட்டாளர்கள் உலகின் மலிவான தரவு செலவுகளை அனுபவிக்கின்றனர்.


நிர்வாகத்தை மாற்றுவதற்கும், அதை மிகவும் திறமையான, அனைவரையும் உள்ளடக்கிய, விரைவான மற்றும் வெளிப்படையானதாக மாற்றுவதற்கும் நாங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளோம். நமது தனித்துவ டிஜிட்டல் அடையாளத் தளமான ஆதார், 1.3 பில்லியனுக்கும் அதிகமான மக்களை உள்ளடக்கியது. ஜன்தன் வங்கிக் கணக்குகள், ஆதார், மொபைல் ஆகிய ஜாம் மும்மூர்த்திகளின் சக்தியைப் பயன்படுத்தி இந்தியாவில் நிதிச் சேர்க்கையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளோம்.ஒவ்வொரு மாதமும், ஏறத்தாழ 10 பில்லியன் பரிவர்த்தனைகள் எங்கள் உடனடிக் கட்டண அமைப்பான யுபிஐயில் நடைபெறுகின்றன. உலகளாவிய நிகழ்நேரப் பரிவர்தனைகளில் 45% க்கும் அதிகமானவை இந்தியாவில் நிகழ்கின்றன. நேரடிப் பயன்கள் அரசு உதவிப் பரிமாற்றக் கசிவுகளை சரிசெய்கின்றன. மேலும் 33 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை மிச்சப்படுத்தியுள்ளது.


கோவின் போர்ட்டல் இந்தியாவின் கொவிட் தடுப்பூசி இயக்கத்திற்கு ஆதரவாக இருந்தது. இது டிஜிட்டல் முறையில் சரிபார்க்கும் சான்றிதழ்களுடன் 2 பில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்களை வழங்க உதவியது. காதி-சக்தி தளம் உள்கட்டமைப்பு மற்றும் தளவாடங்களை வரைபடமாக்க தொழில்நுட்பம் மற்றும் இடஞ்சார்ந்த திட்டமிடலைப் பயன்படுத்துகிறது.இது திட்டமிடுவதற்கும், செலவுகளைக் குறைப்பதற்கும், விநியோகத்தின் வேகத்தை அதிகரிப்பதற்கும் உதவுகிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News