"ஒரு பெரிய திட்டம் விரைவில் வரப்போகுது " - சுதந்திர தின உரையயில் பிரதமர் வைத்த SUSPENSE !

PM Creates Huge Suspense.

Update: 2021-08-15 06:26 GMT

புதுடில்லி: ‛‛உலக அளவில் வளர்ச்சிக்கான ஒரு பெரிய திட்டம் விரைவில் வரப்போகுது '', என டில்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி வைத்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையில் தெரிவித்தார். 

டில்லியில் பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையயில் கூறியதாவது :

சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளை நினைவு கூர்வோம். தியாகிகளுக்கு தலை வணங்குகிறேன். நாட்டு பிரிவினை அனைவருக்கும் வேதனை தந்தது. கோவிட் ஒழிப்பில் ஈடுபட்ட அனைவருக்கும் நாம் நன்றியை தெரிவிப்போம். கோவிட் தடுப்பூசி நமது நாட்டில் தயாரிக்கப்பட்டதால் பலரும் இன்று பலன் அடைந்துள்ளனர். சப்கா ஷாத் சப்கா விகாஸ் என்ற முழக்கத்தின்படி நாட்டில் அனைவரது வளர்ச்சியே நமது இலக்கு. இதற்கென பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.

சாலை வசதி, மின் இணைப்பு ,காஸ் இணைப்பு மூலம் பல கோடி பேர் நன்மை பெற்றுள்ளனர். அனைத்து கிராமங்களிலும் சாலை வசதி வங்கிக்கணக்கு என்பதும் நமது இலக்கு. அனைவருக்கும் சுகாதார வசதியை அளிப்பது அரசின் கடமை. ஏழை குடும்பத்தை சேர்ந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் மருத்துவ வசதியை பெற வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பு வலுப்படுத்தப்படும். வலுவான உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு உதவும். மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை அமல் படுத்தி உள்ளோம். ஏழைகளுக்கு நல்ல சத்துள்ள தரமான அரிசி வழங்கி வருகிறோம். குறைந்த விலையில் தரமான மருந்துகள் வழங்கப்படுகின்றன. தகவல் தொடர்பால் அனைவரும் இணைக்கப்பட வேண்டும்.

பின்தங்கிய 110 மாவட்டங்களில் வளர்ச்சிக்கென தனிக்கவனம் செலுத்தி வருகிறோம். கல்வி, சாலை வசதி, தகவல் தொடர்பு, வேலை வாய்ப்பு ஆகியனவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். நமது நடவடிக்கையால் கிராமங்களில் டிஜிட்டல் தாக்கம் அதிகரித்துள்ளது. கோவிட் காலத்தில் கூட தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தது. நாட்டின் வளர்ச்சிக்கு புதிய கல்வி கொள்கை அவசியம். பழம் பெருமைகளை நாம் மறக்கக்கூடாது.

புரட்சிக்கும், புதுமைக்கும் நாம் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். காதி உற்பத்தியை பெருக்க வேண்டும். மிகபெரிய திட்டம் ஒன்று விரைவில் வர உள்ளது. போர் விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரித்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்ய உள்ளோம். இது உலக அளவில் தொழில் வளர்ச்சியை வளர்ப்பதுடன் இந்தியாவை பெருமை பெற செய்யும்.

என்று பிரதமர் எழுச்சி உரையாற்றினார்.


Image Source : DNA India

Dinamalar

Tags:    

Similar News