மகளிர் தினத்தில் நிதியமைச்சரை பாராட்டிய பிரதமர் மோடி! ஏன் தெரியுமா?

Update: 2022-03-08 10:54 GMT

வளர்ச்சி மற்றும் லட்சிய பொருளாதாரத்திற்கான நிதி என்கின்ற தலைப்பில் பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி வாயிலாக உரையாற்றினார். இதில் 16 அமைச்சகங்கள் மற்றும் நிதி ஆயோக், திறன் மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாநில அரசுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.

இதில் பிரதமர் மோடி பேசியதாவது: சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்களை முதலில் தெரிவிப்பதாக கூறினார். பட்ஜெட் பற்றி நாம் விவாதிக்கும் சமயத்தில் இந்தியாவுக்கு ஒரு பெண் நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்திருப்பது நமக்கு பெருமை அளிக்கிற விஷயமாகும்.

மேலும், இந்த வருடத்திற்கான பட்ஜெட்டில் விரைவான வளர்ச்சியின் வேகத்தை தொடருவதற்கு மத்திய அரசு பல்வேறு வழிகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உள்கட்டமைப்பு முதலீட்டின் மீதுள்ள வரியைக் குறைப்பது மற்றும் வெளிநாட்டு மூலதனங்களை ஊக்குவிப்பது, ஆகியவையால் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கு நாம் எடுக்கின்ற முயற்சி ஆகும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Source,Image Courtesy: Twiter

Tags:    

Similar News