நிரவ் மோடியை நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை அமைச்சர் அனுமதி!

Update: 2021-04-16 00:45 GMT

வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்திருக்கும் பிரபல தொழிலதிபர் நிரவ் மோடியை நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை அமைச்சர் பிரீத்தி படேல் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வைர வியாபாரியான நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ₹14,000 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கை அமலாக்கத் துறையும் சிபிஐயும் விசாரித்து வருகின்றன.

கடந்த பிப்ரவரி 25 அன்று இங்கிலாந்து உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் நிரல் மோடிக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருப்பதாக கூறிய நிலையில் உள்துறை அமைச்சர் நிரவ் மோடியின் நாடு கடத்தலுக்கு அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. நாடு கடத்தப்பட்டால் அவருக்கு நீதி கிடைக்காது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் நீதிமன்றம் கூறியது.

"நிரல் மோடி நியாயமாக தொழில் செய்தார் என்பதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. பணப் பரிமாற்றங்கள் நேர்மையான முறையில் நடந்ததாகத் தெரியவில்லை. இதில் எதோ மோசடி நடந்திருப்பதாகத் தெரிகிறது" என்று‌ வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும் நிரல் மோடிக்கும் வங்கி அதிகாரிகள் உட்பட இந்த மோசடியில் ஈடுபட்ட பலருக்கும் இடையே தொடர்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசியல் அழுத்தம் மற்றும் மீடியாக்களின் கவனம் தன் மீது இருப்பதன் காரணமாக தனக்கு இந்தியாவில் நீதி கிடைக்காது என்று நிரல் மோடி வாதாடிய நிலையில், இந்திய நீதித்துறை பாகுபாடு பார்க்கிறது என்றோ இந்த வழக்கில் இந்திய அரசியல்வாதிகள் தலையிடுகின்றனர் என்றோ கருதுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று சுட்டிக்காட்டி உள்ளனர். 

தற்போது நிரவ் மோடியை நாடு கடத்தி இந்தியாவுக்கு கொண்டு வர இந்திய அரசு வைத்த கோரிக்கையை இங்கிலாந்து உள்துறை அமைச்சரும் ஏற்று அனுமதி வழங்கி இருப்பதால் அவர் விரைவில் இந்தியா கொண்டு வரப்பட்டு சட்ட நடவடிக்கைகள் மூலம் அவருக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News