கோவில் எதிரே கல்லறைத் தோட்டம் - எதிர்த்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது போடப்பட்ட வழக்கு ரத்து!

Update: 2021-04-17 04:59 GMT

திருநெல்வேலி மாவட்டம் மணிமூர்த்தீஸ்வரம் அமைந்துள்ள உச்சிஷ்ட கணபதி கோவிலுக்கு எதிராக இருக்கும் கல்லறைத் தோட்டத்தை நீக்க முயற்சித்த வழக்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் மீது போடப்பட்ட வழக்கை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மணிமூர்த்தீஸ்வரம் தாமிரபரணி ஆற்றங்கரை ஓரம் புகழ்பெற்ற உச்சிஷ்ட கணபதி கோவில் அமைந்துள்ளது. விநாயகர் கோவில்களில் ராஜகோபுரத்தை கொண்ட ஒரே கோயில் இதுதான். திருமண தடை நீங்க திருமணத்தை எதிர்நோக்கி இருக்கும் பலரும் இங்கு வந்து வழிபடுவது வழக்கம்.

இந்த கோவிலுக்கு எதிரில் ஏஜி சர்ச் என்ற கிறிஸ்தவ அமைப்பு நிலத்தை வாங்கி அதை கல்லறையாக பயன்படுத்தி வருகிறது. இந்துக்களின் மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் வகையிலும் வேண்டுமென்றே வழிபாடு செய்ய வருபவர்களின் மனதை புண்படுத்தும் வகையிலும் கோவிலுக்கு எதிரே கல்லறைத் தோட்டம் அமைத்து இருப்பதை எதிர்த்து அறநிலையத்துறை தொடங்கி மாவட்ட ஆட்சியர் வரை பக்தர்களும் இந்து அமைப்புகளும் பல புகார்கள் அளித்தும் இந்த பிரச்சனையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் இந்து முன்னணி அமைப்பாளர்கள் சிலர் கடந்த ஆண்டு இந்த கல்லறைத் தோட்டத்தில் இருக்கும் சில கல்லறைகளை நீக்க முற்பட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த செயலுக்கு எதிராக ஏஜி சர்ச்சைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் இந்து முன்னணி அமைப்பாளர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தவறு செய்த கிறிஸ்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துவிட்டு இந்துக்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு அது எந்த வகையில் நியாயம் என்று இந்து அமைப்புகளும் மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது இந்து முன்னணி திருநெல்வேலி மாவட்ட தலைவர் திரு.உடையார் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக இந்து மக்கள் கட்சி ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News