நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழ மன்னன் கட்டிய கோவில் - மது அருந்தும் இடமாக மாறிய அவலம்!

Update: 2021-04-20 05:50 GMT

அக்காலத்தில் மன்னர்கள் கோவில்களைக் கட்டிய போது அவற்றைப் பராமரிக்க நிவந்தங்கள் அளித்து விதிமுறை வகுத்து கல்வெட்டிலும் எழுதி வைத்துவிட்டுச் சென்றனர். அப்போது 'சிவன் சொத்து குல நாசம்' என்ற பயபக்தி மக்களிடையே இருந்தது. ஆனால் இப்போது திக போன்ற போலி கடவுள் மறுப்பாளர்களாலும், இந்து மதத்தைத் தொடர்ந்து இழிவுபடுத்தி வரும் மிஷனரிகளாலும் மக்களிடையே பக்தியே அற்றுப் போய்விட்டது. 

கோவிலுக்குச் செல்லும் வழக்கம் ஒரு புறம் இருந்தாலும் கோவில் சொத்துக்களைக் கொள்ளை அடிப்பதும் ஆக்கிரமிப்பதும் மறுபுறம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதனால் பல பழைமையான வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கோவில்கள் சிதிலமடைந்து வருகின்றன. அவற்றுள் சோழ மன்னனாக இருந்து நாயன்மாராகிய கோச்செங்கட் சோழர் கட்டிய 70 கோவில்களில் ஒன்றான திருஇந்தளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில்.




நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோவில் மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் மூலவர் சுயம்புவாகத் தோன்றிய மூர்த்தி. எனினும் முன்னர் வழிபாட்டில் இருந்து மண் மூடி புதைந்து போயிருக்கலாம் என்று கருதப்படுவதால் மூர்த்தி இன்னும் பழைமை வாய்ந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்தக் கோவில் பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருவதுடன் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் அமர்ந்து மது அருந்தி அசுத்தம் செய்யும் அவலமும் நடப்பதாக பக்தர்கள் வேதனையுடன் முகநூலில் பதிவிட்டுள்ளனர்‌. அவர்கள் பதிவிட்டுள்ள புகைப்படங்களில் கோவில் வளாகத்தில் மது பாட்டில்கள் சிதறிக் கிடப்பதைக் காண முடிகிறது.


திருவிழாக்களின் போது சுவாமியை எழுந்தருளச் செய்து உற்சவம் செல்ல பயன்படுத்தும் வாகனங்கள் சிதைந்து போய் காணப்படுகின்றன. கோவிலின் பல பகுதிகளும் புனரமைக்கப்படாததால் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன.‌இது பக்தர்கள் இடையேயும் வரலாற்று ஆர்வலர்கள் இடையேயும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது‌.

















கோவிலை புனரமைக்க முயற்சி எடுத்து மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவது எவ்வளவு முக்கியமோ அதே போன்று நமது பண்பாட்டையும் நாகரிகத்தையும் பதிவு செய்து நம் முன்னோர்களின் வாழ்வியலுக்கு சான்றாய் நிற்கும் கோவில்களை பாதுகாத்து பராமரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியம்.

Tags:    

Similar News