சத்தமில்லாமல் சமூகசேவை செய்யும் கோவில்கள்- உணவுப் பொட்டலங்களை விநியோகிக்கும் சென்னிமலை முருகன் கோவில்.!

Update: 2021-05-09 01:37 GMT

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் வெகு தீவிரமாகப் பரவி வருவதால் பல மாநிலங்கள் ஊரடங்கு அமல்படுத்தி வருகின்றன. தமிழகத்திலும் மே 10 முதல் 24 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. ஆனால் அதற்கு முன்னரே வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபட தடை விதிக்கப்பட்டது.

இதனால் கோவில்களிலும் பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டு உள்ளதோடு திருவிழாக்கள் நடைபெறவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் வழக்கமான பூஜைகள், சம்பிரதாயங்கள் உள்ளிட்டவை பக்தர்கள் இன்றி தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சென்னிமலை முருகன் கோவிலில் தொடர்ந்து அன்னாதானம் செய்யப்பட்டு வருகிறது.

பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் அன்னதானத்துக்காக சமைக்கப்படும் உணவு கலவை சாதமாக தயாரிக்கப்பட்டு பொட்டலங்களாக மலை அடிவாரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு கோவில் பணியாளர்கள் மூலம் ஊரடங்கால் வருமானம் இன்றி தவிப்பவர்களுக்கும் ஏழைகளுக்கும் கோவில் பணியாளர்களால் விநியோகிக்கப்படுகிறது. இதனால் தினமும் 100 பேர் பயனடைகின்றனர்.

அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் சென்னிமலை கோவிலும் அடக்கம். பொதுவாக கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்தவர்கள் தாங்கள் தான் சமூக சேவை செய்வது போல் காட்டிக் கொள்வது வழக்கம். இந்து கோவில்கள் அரசுக் கட்டுப்பாட்டில் இருந்தும் தினமும் சத்தமின்றி பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அன்னம் இடுகின்றன.

அரசுக் கட்டுப்பாட்டில் இருக்கும் போதே இந்துக் கோவில்களால் இவ்வளவு சேவை செய்ய முடிகிறது என்றால் பக்தர்களால் நிர்வாகிக்கப்பட்டால் பொது மக்களுக்கு மட்டுல்லாமல் ஆபிரகாமிய மத அமைப்புகளைப் போல் தங்களது மதத்தைச் சார்ந்த பின்தங்கியவர்களுக்கு சிறப்பாக உதவ முடியும். எனவே‌ கோவில்களை அரசுக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற குரல்கள் வலுப்பெறத் தொடங்கியுள்ளன.

இயற்கைப் பேரிடர்கள், கொரோனா போன்ற பெருந்தொற்றுக் காலங்களில் பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் தாங்கள் தான் சமூகத்தின் மீது அக்கறை கொண்டு சமூக சேவை செய்வது போல் காட்டிக் கொள்வது உண்டு. ஆனால் கோவில்களும் இந்து அமைப்புகளும் 'வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக் கூடாது' என்ற பழமொழியைப் பின்பற்றி சத்தமின்றி சமூக சேவை செய்து வருகின்றன.

Tags:    

Similar News