துபாயில் இருந்து இந்தியாவுக்கு ஆக்சிஜன் அனுப்பி வைத்த கோவில்!

Update: 2021-05-14 01:00 GMT

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் தொற்று பாதிப்பு தீவிரமடைபவர்களுக்கு ஐசியு மற்றும் ஆக்சிஜன் சிகிச்சை தேவைப்படுகிறது. பலருக்கும் தொற்று பாதிப்பு தீவிரமடைவதால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது.

பல தனியார் நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் நட்பு நாடுகள் திரவ ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் டேங்கர்களை அனுப்பி உதவி வருகின்றன. அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைந்துள்ள சுவாமி நாராயண் கோவிலைச் சேர்ந்த இந்துக்கள் துபாயில் இருந்து ஆக்சிஜன் அனுப்பி வைத்துள்ளனர்.

கடந்த திங்களன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்துக்கள் ஜெபம் அலி துறைமுகத்தில் திரண்டு தங்கள் தாய்நாட்டில் சிரமப்படும் இந்தியர்களுக்கு உதவ ஆக்சிஜன் சிலிண்டர்களை கப்பலில் ஏற்றினர். துபாயில் செயல்படும் இந்துக்களுக்கு சொந்தமான ஹீலியம் உற்பத்தி தொழிற்சாலையில் உள்ள அலகுகளை இந்தியாவுக்கு உதவும் நோக்கில் ஆக்சிஜன் உற்பத்தி அலகுகளாக மாற்றியுள்ளனர்.

இந்த தொழிற்சாலையின் உரிமையாளர்கள் தான் துபாயில் உள்ள சுவாமி நாராயண் கோவிலைக் கட்ட உதவி புரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் கட்டமாக 350 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 600 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் -185°Cல் அடைக்கப்பட்ட திரவ ஆக்சிஜன் உள்ளிட்டவை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மாதம் தோறும் 440 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அனுப்பிவைக்க சுவாமி நாராயண் கோவிலைச் சேர்ந்தவர்கள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது அரசிடம் வழங்கப்படுவதோடு இந்தியாவில் சுவாமி நாராயண் பிரிவால் நடத்தப்படும் மருத்துவமனைகளுக்கு மினி வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தங்களது உண்மையான இலக்கு இதுவும் கடந்து போகும் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தி இந்த ஒற்றுமையின் மூலம் நேர்மறை எண்ணங்களை மக்கள் மனதில் விதைப்பதே என்று சுவாமி நாராயண் பிரிவின் துறவிகள் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News