கொரோனா வைரஸ் சீன ஆய்வுக்கூடத்திலிருந்தே தோன்றியிருக்க வாய்ப்பு? அமெரிக்காவின் அறிக்கை..!

Update: 2021-05-22 11:59 GMT

கொரோனா வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் உலுக்கி கொண்டு இருக்கிறது. தற்போது வரை அதனுடைய பரவல் மற்றும்  வீரியம் பற்றி உலகில் உள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களும் அதை பற்றி ஆராய்ச்சி செய்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியது  முதல்  இந்த வைரஸை உலகிற்கு சீனாதான் பரவியது என்று அமெரிக்கா குற்றச்சாட்டு வைத்திருந்த நிலையில்  தற்போது அமெரிக்கா அரசிடம் அமெரிக்கா எம்.பி-க்கள் விசாரணை அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தனர்.


வெளியில் கசிந்த அந்த 21 பக்க அறிக்கையில்  வூஹானில் தொற்று நோய் தொடர்பாக ஆபத்தான பரிசோதனை நடைபெறுவதாகவும், சீனாவின் இராணுவம் அந்த ஆய்வுக்கூடங்களில் நிறுத்திவைக்க பட்டிருப்பதாகவும் அதில்  கூறப்பட்டிருந்தது. சீனா அமெரிக்காவின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும், அதுமட்டுமின்றி டாக்டர் ஆண்டனி பாவ்சி தலைமையிலான அமெரிக்கா நிறுவனம் அளித்த நிதியுதவியுடன் சீனாவில் கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வுகள் நடைபெற்றதாவாகும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது .


இன்று வரை  கொரோனா வைரஸின் பரவலுக்கு சீனா தான் காரணம் என்று பல நாடுகள் குற்றம்சாட்டிருந்த நிலையில் தற்போது வரை கிடைத்து இருக்கும் தகவல்கள் அனைத்தும் அந்த குற்றச்சாட்டு உண்மையாக இருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது. அமெரிக்காவின் விசரணைக்கு சீனா ஒத்துழைக்காமல் இருப்பது சீனாவின் மீது இருக்கும் சந்தேக பார்வையை மக்களிடையே அதிகரித்து வருகிறது. மக்களின் சந்ததேகத்திற்கு சீனாவிடம் இருந்து பதில் கிடைக்குமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

Tags:    

Similar News