நீங்கள் சைவ உணவு பிரியரா? பண்டைய நூல்களில் இடம்பெற்றுள்ள உங்களுக்கான தகவல்.!

Update: 2021-05-24 01:00 GMT

பண்டைய காலங்களிலிருந்தே வரகு அரிசி தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வரகரிசி 3000 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் உடைய பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதற்கு ஆதாரமாக பண்டைய நூல்கள் மற்றும் கவிதைகளில் இது இடம்பெற்றுள்ளது. இதை தவறாமல் நம் உணவில் சேர்த்துக் கொண்டால் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். அது என்னென்ன நன்மைகள் என்பதை தற்போதைய அறிந்து கொள்ளலாம். இந்த வரகு பசையம் இல்லாதது. பசையம் இல்லாத உணவை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த மாற்றாகும். 


வரகு வேகமாக சமைக்க ஏற்றது. சுவை மிகுந்த உணவாகவும் நமக்கு ஏற்றவாறு சமைத்துக் கொள்ளலாம். வரகு மற்றும் தண்ணீரை கலந்து குழைத்து காயம் ஏற்பட்ட பகுதியில் இதை பயன்படுத்தலாம். வயிறு மற்றும் மனம் ஆகிய இரண்டிற்கும் அமைதியை வழங்கும் ஒரு மருத்துவ குணம் வாய்ந்த உணவாகவும் பார்க்கப்படுகிறது. நிறமிகள் மற்றும் பாதுகாப்பற்ற பல செயற்கை பொருட்கள் நிறைந்த ப்ரோடீன் பவுடர்களை வாங்கி சாப்பிடுவதை விட, புரத தேவைகளை இயற்கையான உணவுகள் மூலம் எடுத்துக்கொள்வது நல்லது. 


நீங்கள் ஒரு சைவ உணவு பிரியர் என்றால், வரகு உங்களுக்கு பிடித்த உணவாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதோடு 100 கிராம் வரகில் சுமார் 8.3 கிராம் புரதம் உள்ளது. வராகு நார்ச்சத்து நிறைந்த உணவாக இருக்கிறது, எனவே இது நமது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் தன்மைக் கொண்டுள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்ல உணவாக அமைகிறது. வரகில் கொழுப்பு குறைவாக உள்ளது, நார்ச்சத்து அதிகம் உள்ளது மற்றும் மிக நீண்ட நேரம் நமக்கு பசியெடுக்காமல் இருக்க உதவியாக இருக்கிறது.

Tags:    

Similar News