ராமநாதபுரத்தில் பரபரப்பு..! தலை துண்டிக்கப்பட்ட கோவில் சிலை..!!

Update: 2021-05-25 14:47 GMT

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள பழமையான தீர்த்தாண்டதானம் கடற்கரைக் கோவிலில் அமைந்துள்ள சிலை உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகில் தீர்த்தாண்டதானம் என்ற ஊரில் பழமையான சர்வதீர்த்தேஸ்வரர் என்ற சிவன் கோயில் உள்ளது. இங்கு பெரியநாயகி சமேத சிவபெருமான் மூலவராக உள்ளார். ராமாயண காலத்தில் ராவணனிடமிருந்து சீதையை மீட்க இலங்கை செல்லும் வழியில் இந்தப் பகுதியில் ராமர் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து இளைப்பாறியதாகவும் அவர் தாகத்தால் வருந்துவதையறிந்த வருணபகவான், அப்பகுதியில் ஒரு தீர்த்தத்தை ஏற்படுத்தியதாகவும் நம்பப்படுகின்றது.

ராமருக்கு தீர்த்தம் கொடுத்ததால், அப்பகுதிக்கு தீர்த்தாண்டதானம் என்று பெயர் ஏற்பட்டதோடு அங்குள்ள கடலில் நீராடி ஈசனை வழிபடுபவர்கள் அனைத்து தீர்த்தங்களிலும் நீராடியதற்கு ஒப்பான பலனைப் பெறுவார்கள் என்று சில பெருமான் வரமளித்ததாகவும் நம்பப்படுகிறது.

இந்தத் தீர்த்தத்தில் உள்ள நீரை வைத்துத் தான் ராமர் சர்வதீர்த்தேஸ்ழரரை பூஜித்திருக்கிறார்.

இங்கு வரும் பக்தர்கள் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள விநாயகர், அம்மன், கருப்பர் சுவாமிகளை வணங்கிவிட்டு கோயிலுக்கு செல்வது வழக்கம். இப்போது இங்குள்ள கருப்பர் சிலையின் தலை பகுதி உடைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடற்கரைப் பகுதியில் சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக சுற்றி திரிவதாகவும் மாலை நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் அவர்கள் இச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் கிராம மக்கள் கூறிய நிலையில், எஸ்.பி.பட்டினம் காவல் துறையினர் சிலையை சேதப்படுத்தியது யார் என்று விசாரித்து வருகின்றனர்.

நன்றி : தினமலர் 

Tags:    

Similar News